11/16/2012

| |

உகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்டார்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள உகண்டா ஜனாதிபதி யோவெலி ககுடா முஸேவேனி இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தை நேற்று புதன்கிழமை பார்வையிட்டார்.
இலங்கையின் தொழில்நுட்ப அறிவை உகன்டா நாட்டில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அந்நாட்டு ஜனாதிபதி பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். இதனையடுத்து இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் அழைப்பின் பேரிலேயே குறித்த ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்ச நிறுவனத்தை பார்வையிட்டார்.
மேலும் அந்நிறுவனத்திலுள்ள மோட்டார் இயந்திரவியல் பிரிவு, கணனி மற்றும் இயந்திரவியல் பிரிவு ஆகிய பிரிவுகளை உகண்டா ஜனாதிபதி யோவெலி ககுடா பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது அவரின் பாரியார் முசெவேனி உள்ளிட்ட தூதுவர்குழுவுடன் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பிரதியமைச்சர் துமிந்த திஸாநாயக்க, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. திலக்கரத்தின மற்றும் மேலதிக செயலாளர் ஏ.ஆர் தேஷபிரியவும் கலந்துகொண்டனர்.