மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் 4 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேம்படுத்துமுகமாக மட்பாட்டங்களை தயாரிப்பதற்கான கருவிகள் வழங்கும் நிகழ்வு இன்று(20.11.2012) பிரதேச செயலாளர் உதயசிறிதர் தலைமையில் இம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்த பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இத் திட்டத்தில் முதற்கட்டமாக 20 மட்பாண்ட உற்பத்தியாளர்கள் இணைந்து கொண்டு உபகரணத்தை பெற்றுக் கொண்டார்கள். முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இதற்காக 3 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்;கீடு செய்திருந்தார்.