11/16/2012

| |

கஹவத்தைக்கு இராணுவ பாதுகாப்பு

கஹவத்தை பிரதேசத்தின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் மர்மக் கொலைகளை அடுத்தே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 இந்நிலையில், உடவளவை மற்றும் குருவிட்ட இராணுவ முகாம்களைச் சேர்ந்த சுமார் 60 இராணுவ வீரர்கள் கஹவத்தை பிரதேசத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார். 
ஏற்கனவே அப்பகுதியில் நிலைகொண்டுள்ள பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாகவே இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். 
பொலிஸாரின் கோரிக்கைக்கு இணங்கே கஹவத்தையின் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய இராணுவ பேச்சாளர், அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் 24 மணிநேர பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர் என்று கூறினார்.