தமிழ் தேசியம், ஈழப் போராட்டங் கள், மொழி போராட்டங்கள் மார்க்சிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் இப்படி சமத்துவத்திற்காக போராடும் எத்தனையோ கூடாரங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறோமே இதில் எந்த ஒரு பாசறையிலிருந்தும் இவர்களுக்காக, இவர்களையும் தன் சக மனிதனாக நினைத்து குரல் கொடுத்தவர் எத்தனைப் பேர்?
2012 ஏப்ரல் மாதம் சென்னை டி.பி. சத்திரத்தில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். நம் ஊர் தொலைக்காட்சிகளுக்கு அது வெறும் பரபரப்பான செய்தியாக மட்டுமே இருந்தது. பார்ப்பவர்களுக்கும் அதைப் பற்றிய எவ்விதமான சொரணையும் இல்லை.
இறந்து போன அண்ணனின் வேலையை கார்ப்பரேஷனிலோ பஞ் சாயத்திலோ வாங்கிய தம்பி சின்ன முனியும் ஜூலை மாதத்தில் அதே போன்றதொரு முடிவில் மரணமடைந் திருக்கிறார். இறந்து போனவர்களுக்கு அரசு நிவாரணம் எதுவும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
சுதந்திர இந்தியாவில் 1993ல் மனிதக் கழிவை சக மனிதன் கையால் சுத்தம் செய்யும் கொடுமையைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட் டது. இந்தச் சட்டத்தை மீறுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வலுவான அதிகாரத்தை இந்தியாவின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் கொடுத்திருந்தாலும் இன்றுவரை ஒரு மாவட்ட ஆட்சியர் கூட இச்சட்டத் தின்படி நடவடிக்கை எடுத்ததாக தெரி யவில்லை.
இதை விட வேடிக்கையும் கொடு மையும் என்னவென்றால், இந்திய அரசு நிறுவனமான இந்திய ரயில் வேயில்தான் இன்றுவரை இத்தொழி லைச் செய்வதற்கு என்றே பணி யாட்கள் வேலைக்கு அமர்த்தப்படுகி றார்கள் நேரடியாகவோ ஏஜன்ஸி மூலமாகவோ! இக்கொடுமைக்கு எதி ராக குரல் கொடுத்திருக்கும் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு வெகு அருகில் உலர் கழிவறைகள் இன்றும் இருப்ப தாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 13 இலட்சம் உலர் கழிவறைகள் இருப்பதையும் அதைச் சுத்தம் செய்வதில் மனிதர்க ளும், மிருகங்களும் (பன்றிகள் - நாய் கள்) சமபங்கு வகிக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 24.6 கோடி கழிவறைகளில் 26 இலட்சம் கழிவ றைகளின் மனிதக் கழிவு திறந்தவெளி சாக்கடையில் கலக்கிறது. இச்சாக்க டையை துப்பரவு தொழிலாளிக்குரிய எவ்விதமான காலணியோ, உடைகளோ, கண்ணாடியோ, பிராணவாயு சிலிண் டர்களோ எதுவுமின்றி மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்பவன் உங்களை யும் என்னையும் போல சக மனிதன் தான்.
இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காணச் சொன்ன எவ ருக்கும் இந்தியாவின் இந்தக் கொடுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தெரியுமா அவர்களின் சிறுகுடல் பெருங்குடல்கள் மலம் சுமப்பதில்லை; அவர்கள் மலம் கழிப்பதுமில்லை.
இந்தி தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நடிகர் ஓர் உண்மை சம்ப வத்தை கொஞ்சம் நகைச்சுவையுடன் சொன்னது நினைவுக்கு வருகிறது.
அந்த நடிகர், மும்பையிலிருந்து தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிர பலமான பின் அவருடைய கிராமத் திற்கு சென்றிருந்தபோது கிராமத்து மக்கள் கேட்டார்களாம், "மும்பையில் தானே பேரழகி ஐஸ்வர்யா ராய் இருக் கிறார்” என்று! இவரும் "ஆமாம்” என் றாராம். அதில் ஒருவர் ரகசியமாக வந்து மெல்லிய குரலில் கேட்டாராம் "முன்னா, அவுங்களும் நம்மளைப் போல காலை யில் எழுந்து நம்பர் டூ இருக்கத்தானே செய்வாங்க...” என்று!
எதற்கெடுத்தாலும் அமெ ரிக்கா அமெரிக்கா என்றும் மேலை நாடுகள் என்றும் பறந்து கொண்டிருக்கும் நம் இளம் அறிவுக் கொழுந்துகளுக்கு ஏன் அந்தந்த நாடுகளில் பயன்பாட் டில் இருக்கும் கழிவுகளை எடுத்துச் செல்லும் வாகனம், சுத்திகரிப்பு தொழி லாளிக்கு அரசு செய்து கொடுத்திருக் கும் வசதிகள், அவர்கள் பயன்படுத் தும் நவீன ஆயுதங்கள், எந்திரமய மான சுத்திகரிப்பு வேலை எதையும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண் டும் என்று எண்ணமே வரவில்லை?
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டி ருக்கும் நவீன ஐ பேட் இந்திய சந்தை யில் வரும் முன்பே டில்லியில் விற் பனை ஆகும் அளவுக்கு நுகர்வோர் சந்தையைக் கொண்ட இந்திய சமூகம் இதை மட்டும் ஏன் கண்டு கொள்ள வில்லை?
வால்மார்ட் இந்திய மண்ணில் கால் பதித்தே ஆக வேண்டும் என்று பிடி வாதமாக இருக்கும் இந்திய அரசு, அதே அமெரிக்க நாட்டிலிருந்து இந்த வசதிகளையும் கொண்டு வர ஏன் முயற்சிப்பதில்லை?
கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ் நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 19 பேர் சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கும்போது மர ணம் அடைந்திருக்கிறார்கள், அவர்க ளைப் பற்றி பேசவோ எழுதவோ சாதிப்படி நிலையைத் தாண்டி ஒரு வரும் வரவில்லையே! ஏன்?
செத்துப்போன அந்த 19 பேரும் தமிழர்கள் இல்லையா? அவர்கள் சாவுக்கு யார் காரணம்?
தமிழ் தேசியம், ஈழப் போராட்டங் கள், மொழி போராட்டங்கள் மார்க்சிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் இப்படி சமத்துவத்திற்காக போராடும் எத்தனையோ கூடாரங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறோமே இதில் எந்த ஒரு பாசறையிலிருந்தும் இவர்களுக்காக, இவர்களையும் தன் சக மனிதனாக நினைத்து குரல் கொடுத்தவர் எத்தனைப் பேர்?
ஏனெனில் இத்தொழில் இந்திய சமூகத்தில் ஒரு சாதியம் சார்ந்த தொழில். இத்தொழிலை செய்வது இவன் தலைவிதி என்று விதிக்கப்பட் டிருப்பதை காலம் காலமாய் சுமந்து சுமந்து செல்லரித்து போய் செப்பனிட முடியாத அளவுக்கு சிதைந்து கிடக்கி றது நம் சமூகம்.
இந்தியாவில் மட்டுமே இக்கொடுமை நிலவுவதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும். இக் கொடுமை இந்திய தேசத்தின் அவமா னம் *. keetru
- புதிய மாதவி, மும்பை