ஷின் ஜின்பிங் சீனாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் நிலவும் ஊழலை கம்யூனிஸ்ட் கட்சி சமாளிக்கவேண்டும், மேலும், மக்களிடமிருந்து அந்நியமடையும் பிரச்சினையையும் அது தீர்க்கவேண்டும் என்று அவர் கூறினார்.
கட்சித் தலைமை மற்றும் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு இரண்டையும் ஏற்றுக்கொண்ட பின்னர் பெய்ஜிங்கில் மக்களின் பேரரங்கில் நுழைந்த ஷி ஜிங்பிங், புன்னகைத்தவாறே, கூடியிருந்தோரை நோக்கிக் கையசைத்தார்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தமடையும் நிலையில் அவர் பதவி ஏற்கிறார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் தலைமைப்பீடமான, பொலிட்பீரோவின் நிலைக்குழு உறுப்பினர்களின் எண்ணிகை ஏழாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஐவர் புதியவர்க