11/04/2012

| |

மட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம்

மட்டக்களப்பு மாணவர்களுக்கும் பிரித்தானிய மாணவர்களுக்கும் இடையில் உறவுப்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு பிரித்தானியாவில் உள்ள பாடசாலை பாடசாலை ஒன்று உதவ முன்வந்துள்ளதுடன் இரு பாடசாலை மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் வேண்டுகோளின் பிரித்தானிய சரிட்டி அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்;குட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இரவு பாடசாலையில் கோலாகலமாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் வி.சேகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரித்தானிய சரிட்டி அமைப்பின் ஸ்தாபகர் டிலானி,பிரித்தானிய அனுசரனையாளர்கள், சரிட்டி அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் டி.தர்மரஞ்சன்,மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் சத்தியநாதன்,ஓசானம் நிலைய அருட்சகோதரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செயற்றிட்டம் மூலம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இப்பாடசாலை அபிவிருத்திசெய்யப்படவுள்ளதுடன் மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பிரித்தானியாவில் உள்ள கல்கோல் பாடசாலையின் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்புக்களும் ஏற்படுத்திகொடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பயனடையும் வகையில் ஆங்கில அகராதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சரிட்டி அமைப்பின் உறுப்பினர்கள்,அனுசரணையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மாணவர்களினால் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தன.