11/24/2012

| |

தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கியம் வலுப்பெறும்

இலங்கையில் உண்மையான இன ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் எமது நாட்டு இராணுவத்திலும், பாதுகாப்புப் படைகளிலும், பொலிஸ் திணைக்களத்திலும் அனைத்து இன மக்களும் சேர்ந்து கொள்வதற்கு சம சந்தர்ப்பம் அளிக்க வேண் டும் என்ற சித்தாந்தம் இப்போது நடைமுறைப்படுத்தப்படுவது அனை வருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஓர் உன்னதமான செயற் பாடாகும்.
30 ஆண்டுகால யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரி சாத்வீகப் போராட்டங்களை நடத்திய போதும் அவை கடந்த காலத்தில் நம் நாட்டில் ஆட்சி செலுத்திய அரசாங்கங்களினால் இராணுவத்தினரையும் பொலிஸா ரையும் பயன்படுத்தி கடுமையான முறையில் அவற்றை அடக்கிய நிகழ்வுகள் மக்களின் மனதில் இன்றும் நிலை கொண்டிருக்கின்றன.
1956 ஆம் ஆண்டில் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் மக்கள் ஐக்கிய முன்னணி கூட்டரசாங்கம் தனிச் சிங்களச் சட்ட த்தை அமுலாக்கியது முதல், தமிழ் மக்கள் இந்நாட்டவர்கள் அல்ல இரண்டாந்தரப் பிரஜைகள் என்ற உணர்வு அவர்கள் மனதில் வலு ப்பெற ஆரம்பித்தது.
அதையடுத்து அன்று எதிர்க் கட்சியில் வீற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜே. ஆர். ஜயவர்தன தலைமையில் கண்டிக்குப் பாத யாத்திரை மேற்கொண்டதனால் ஆரம்பித்த தமிழர்களுக்கு எதி ரான எதிர்ப்பு, விஸ்வரூபம் எடுத்து ஸ்ரீ எழுத்தின் அறிமுகத்து டன் பொது இடங்களில் உள்ள தமிழ் அறிவிப்புகள் மீது தார்பூசி இழிவுபடுத்தப்பட்டன.
இவ்வாறான இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளினால் 1958 ஆம் ஆண்டில் இலங்கையில் என்றும் நடைபெறாத தமிழர்களு க்கு எதிரான இனக் கலவரம் ஏற்பட்டது. இதில் 100க் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடமைகள் அழிக் கப்பட்டன.
இவ்வித அடக்குமுறைகளை அன்றைய அரசாங்கங்கள் மேற்கொள் வதற்கு இராணுவத்தினர் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டனர். அது போன்று 1974 ஆம் ஆண்டு அனைத்துலக தமிழ் ஆராய் ச்சி மன்றத்தின் தோற்றுனர் வணக்கத்துக்குரிய சேவியர் அடிகளா ரால் நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற போதும் பொலிஸாரின் தவறான தலையீட் டினால் அங்கு பலர் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற சம்பவங்களினால் பயங்கரவாதம் 1980 களில் தலைதூக்கு வதற்கு முன்னரே தமிழர்கள் இலங்கை இராணுவத்தைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். அதனால் தமிழர்கள் அன்று இது சிங்கள இராணுவம் என்று பிரிவுபடுத்தி அதனை அழைக்கும் அளவுக்கு இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் மக்கள் வெறுப்படைந்திருந் தார்கள்.
இந்தப் பின்னணியிலேயே எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதம் முளைவிட்டு தழைத்தோங்க ஆரம்பித்தது. இலங்கையின் முன்னைய அரசாங் கங்கள் ஒரு பூனைக்குட்டி, கரப்பான் பூச்சி ஒன்றை பிடித்து விளை யாடி அதனைத் துன்புறுத்துவதைப் போன்று பயங்கரவாதத்தை பலவீனப்படுத்தாமல் அதனை தனது அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்கு பயன்படுத்தி வந்தன.
ஆயினும் 2005 ஆம் ஆண்டு தென் இலங்கையின் மண் வாசனை யுடன் தோன்றிய தேசத் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் வெளிநாட்டு அழுத்தங்களையும் உதாசீனம் செய்து, இந்நாட்டு மக்களை ஐக்கியப்படுத்த வேண்டுமாயின், முதலில் பயங்கரவாதத்தை இலங்கையில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற திடமான நோக்குடன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியன்று எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதத்தை இலங்கை மண் ணில் இருந்து துவம்சம் செய்து தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்கள வர்கள் என்ற சகல இன மக்களையும் பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்தார்.
அதையடுத்து ஜனாதிபதி அவர்கள் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக் குழுவின் ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நிரந் தர அரசியல் தீர்வை ஏற்படுத்தும் மகத்தான பணியை இன்று வெற்றிகரமான முறையில் மேற்கொண்டு வருகின்றார்.
தமிழ் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் சிங்கள இராணு வம் என்ற வெறுப்புணர்வை முற்றாக அகற்றிவிட வேண்டுமா யின், தமிழர்களும் இலங்கை இராணுவம் எங்களுக்கும் சொந்தமா னது என்ற உணர்வை மானசீகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என் பதை நன்கு புரிந்திருந்த ஜனாதிபதி அவர்கள், தமிழர்களை ஆயு தப் படைகளிலும் பொலிஸ் படைகளிலும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் ஒரு புதிய யுகத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
எல். ரி. ரி. ஈ.யின் முன்னாள் ஆண், பெண் போராளிகளை மன்னித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்த பின்னர் அந்தப் போராளி களை பொலிஸிலும் இராணுவத்திலும் சேர்த்துக்கொள்ளும் நற் பணி இன்று இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சியில் கடந்தவார இறுதியில் 109 தமிழ்ப் பெண்கள் இராணு வத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது இராணுவத்தை மக்கள் மயமாக் கும் திட்டமாக அமைந்திருக்கின்றது என்று பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நற்பணி தொடர்ந்து, தமிழர்களும் முஸ்லிம்களும் இராணுவத்திலும் ஏனைய ஆயுதப் படைகளிலும் பொலிஸிலும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இவ்விதம் செய் தால் எதிர்காலத்தில் சிறுபான்மை மக்கள் எங்கள் இராணுவத்தை சந்தேகக் கண்ணோடு பார்த்து இது சிங்கள இராணுவம் என்று அழைக்கும் நடைமுறை மறைந்துவிடுவது திண்ணம்.
thinakaran