11/05/2012

| |

சுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பொன்.செல்வராசா என்பவர் கடந்த சில நாட்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளில் அரசியில் தலையீடு காணப்பட்டதாகவும், தமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களான சில பட்டதாரிகளுக்கு இதன் கீழ் அனுமதி கிடைக்கவில்லை எனவும் அறிக்கைகளில் தெரிவித்திருந்தார். உண்மையில் நியமணங்களில் நடைபெற்றது என்ன? செல்வராசா எம்.பி அவர்கள் வழக்குத் தொடுப்பதற்குரிய முக்கிய காரணம் என்ன போன்ற விடயங்களை இக்கட்டுரை விளக்கவிருக்கின்றது.
பொன். செல்வராசா எம்.பி என்பவர் தமது முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் காலத்திலிருந்தே மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியிலே தமது குடும்பத்திற்கு ஒதுக்கி வரும் திறமைசாலியாவார். தனக்கென சொந்தமாக படுவான்கரை உட்பட பல இடங்களில் தனது உறவினர் பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் ஒருவர்.
கடந்த 2010, 2011 மட்டக்கப்பில் வெள்ள காலங்களில் வெள்ளத்திற்கு உள்ளாகும் பிரதேசங்களை பார்வையிட்டு வந்து அம்மக்களுக்கு நிவாரண உதவி செய்வதற்கு என புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து நிதியினைப் பெற்று அதனை தனது பெயரில் சேமித்து வைத்த ஒருவர் என்பது பல கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு தெரியாது.
 உதாரணமாக கடந்த 25.12.2010  அன்று மட்டக்களப்பின் பல பிரதேசத்திற்கும் தற்போது வீரகேசரியின் செங்கலடி பிரதேச நிருபராக கடமை வகிக்கும் நபருடன் சென்ற செல்வராசா எம்.பி அவர்கள், அங்கு பார்வையிட்டதாக சில புகைப்படங்களை எடுத்துச்சென்று அம்மக்களுக்கு உதவிக்காக சில அமைப்புக்களிடமிருந்து உதவி பெற்றிருந்தார். ஆனால் அவ்வாறு பெற்ற உதவியினை அவர் மக்களுக்கு வழங்கவில்லை. இது ஏனைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் தெரிந்த விடயம்.
இத்தகைய செயல்களை செய்து மக்களை வைத்து தமது சொத்தை சேர்க்கும் சுயநலவாதிதான் செல்வராசா எம்.பி. ஆனால் அவர் அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட நியமணனங்களில் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோரின் அரசியல் தலையீடுகளினாலேயே அரச கட்சி சார்ந்தவாகளுக்கு மாத்திரம் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூற்றில் உண்மையுமில்லை. அதேவேளை அலவருடைய சொந்த மருமகன் மற்றும் மகள் மாருக்கு அந்த நியமனத்தில் அனுமதி கிடைக்காத காரணத்தினாலேயே உண்மையில் அவர் இந்த அனுமதியில் குளறுபடிகள் நடந்ததாக கூறியிருந்தார். தனது குடும்பத்தினரின் சுயநலத்திற்காகவே அவர் ஏனைய பட்டதாரிகளையும் இணைத்து அரசியல் செய்ய நினைக்கின்றார்.
உண்மையில் இந்த பொருளாதார அமைச்சின் கீழான நியமனம் என்பது, ஏற்கனவே பொருளாதார அமைச்சிற்கு என தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கே வழங்கப்பட்டதே தவிர, புதிதாக எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேவேளை ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட பதிவுகளுக்கமைவாகவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அரசியல் பாரபட்சம் என்ற ஒரு துருப்புச்சீட்டை இவர் பயன்படுத்துவதன் காரணம் தனது உறவினாகள் அதில் அடங்கப்படவில்லை என்ற காரணமே தவிர, வேறெதுவுமில்லை.
ஆனால் ஏற்கனவே மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் , அதாவது தமது அரசியல் பலத்தை பிரயோகித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகளிடம் தமது உறவினர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்படி கேட்டிருந்தார். அதனை அவர்கள் நிராகரித்த  நிலையிலேயே இவர் ஏனைய பட்டதாரிகளையும் தமது சுயநலத்திற்காக உசுப்பேற்றி விட்டுள்ளார்.
இதுதவிர இந்த திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கையும் தொடுக்கவிருக்கின்றார். இவ்வழக்கை தொடுப்பதற்கு நிதிமன்றில் வாதாட இருப்பவர் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆவார். இந்த வழக்கில் அவர் ஆ+ஜராவதற்கு கேட்ட பணத்தொகையை பெறுவதற்காகவே அரியநேந்திரனை அவர் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளார். அங்கு முன்னைநாள் விடுதலைப்புலிகளின் நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலரைச் சந்தித்து இதற்குரிய நிதியைப் பெறுவதற்ககாவே அரியநேந்திரனின் பயணம் அமைந்துள்ளது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் தமது சுயநல நோக்கத்திற்காக அரசியல் அந்தஸ்தை பயன்படுத்தி வருகின்றமைiயினை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
-ஆராவாணன்-