11/04/2012

| |

மட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட செயலகத்துக்கு சொந்தமான விடுதியின் பின்புறத்தில் இருந்து யுவதி ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.


சடலமாக மீட்கப்பட்டவர் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டத்தை சேர்ந்த சிங்கராசா ரதிகா (20வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மாவட்ட செயலகத்தின் விடுதியில் உள்ள வவுணதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரின் வீட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில், நேற்று மாலை தொடக்கம் அவரை காணாமல் குறித்த வீட்டைச் சேர்ந்தவர் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை விடுதியின் பின்புறப்பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் கிடப்பதைக்கண்டு காத்தான்குடி பொலிஸாருக்கு குறித்த பெண் வேலை செய்யும் வீட்டு உரிமையாளர் அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்ன மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவ தினம் மாலை பின்புறப்பகுதியில் உள்ள மரம்மொன்றில் குறித்த பெண் மரம் வெட்டிக்கொண்டிருக்கும்போது வீழ்ந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் பின்புறப்பகுதி அடிபட்டதன் காரணமாக இந்த மரணம் சம்பவத்திருக்கலாம் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா, விசாரணை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டார்.


இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.