11/24/2012

| |

பெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிபொருள் நிலையம் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மிகப்பெரிய நிலையமாக இந்த எரிபொருள் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வருடகாலமாக யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் சுமார் களுவாஞ்சிகுடி நகருக்கு சென்றே எரிபொருளை பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்தது.
இந்த நிலையில் புலம்பெயர்ந்துவாழும் எமது மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் முயற்சியினால் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு எரிபொருள் நிரப்பு நிரப்பு நிலையத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம்,மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் அஸீஸ்,மக்கள் வங்கி மட்டக்களப்பு நகர கிளை முகாமையாளர் சரவணபன,தாண்டியடி விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி கருணாரட்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.