11/05/2012

| |

இப்படியும் நடக்கிறது

கூடங்குளத்தைத் திறக்க வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உனடியாக திறக்க வலியுறுத்தியும், அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து தஞ்சை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.திருச்செந்தில் தலைமை வகித்தார்.
சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள்(மன்னார்குடி)எம்.பூங்கொடி,(தஞ்சை).எஸ்.செபாஸ்டின்,(பட்டுக்கோட்டை)எஸ்.தர்மராஜ்,(ஒரத்தநாடு)ஆர்.கோகுலக்கிருஷ்ணன்,(திருவையாறு)வி.எம்.ஆர்.ராவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜி.ரெங்கசாமி மூப்பனார் தொடக்கிவைத்தார்.
கோரிக்கையினை விளக்கி, பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன்,மாவட்டத் தலைவர்கள்(தஞ்சை தெற்கு)நாஞ்சில் கி.வரதராஜன்,(தஞ்சை வடக்கு)எம்.ராஜாங்கம்,(திருவாரூர்)குடவாசல் எஸ்.தினகரன்,தஞ்சை பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங் தலைவர் பிரபு, முன்னாள் மாநில பொதுச்செயலர் ராம்மோகன்,மாவட்ட மகளிரணி தலைவர் டி.விஜயலெட்சுமி,நகரச்செயலர் எஸ்.சிவசுப்புரமணியம்,வட்டாரத்தலைவர் வி.மதியழகன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக தேரடியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நகரின் முக்கிய வீதிகளின் வழியே கோரி்க்கையினை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்து கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சுமார் நூறு பெண்கள் உள்பட 700 மேற்பட்டவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.