மட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில் வார இதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இணைந்து இந்த பத்திரிகையை வெளியிட்டுள்ளனர்.
செய்தி மற்றும் கட்டுரைகள்,மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலான செய்தி ஆய்வுகள்,மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கியுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான கட்டுரைகளைக்கொண்டதாக இந்த இதழ் வெளிவந்துள்ளது.
வாரம் ஒருமுறை இந்த இதழ் வெளிவரவுள்ளதாக குறித்த பத்திரிகை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண செய்திகளை அடிப்படையாகக்கொண்டு இந்த பத்திரிகை வெளிவரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.