11/20/2012

| |

கறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

மஹிந்தோதய ஆய்வுகூடத் திட்டத்தின் கீழ் கல்குடா கல்வி வலயத்திலுள்ள கறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(20.11.2012) வித்தியாலயத்தின் அதிபர் அருமைராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதயாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அதிதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள ஆய்கூடமானது நவீன தொழிநுட்பத்துடன் கூடிய சகல வசதிகளுடன் அமைந்த ஓர் ஆய்வு கூடமாக அமையப் பெறும்.