11/22/2012

| |

செயற்கைக்கோள் ஏவுவது பிற்போடப்பட்டது

விண்ணுக்கு ஏவப்படவிருந்த தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) ஐந்து நாட்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
சீரற்ற காலநிலை காரணமாகவே செயற்கைக்கோளை ஏவுவதை  பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக  அவர் கூறினார். 
தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து  இன்று வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.