இலங்கையின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன. சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண்டு ஜூன் மாத்தின் பின்னர் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு மைய வேலைகள் கண்டி - பல்லேகலவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வரும் வியாழன் முதல், தனக்கென சொந்தமாக தொலைத்தொடர்பு சற்றலைட் வைத்திருக்கும் நாடுகளில் 45ஆவது இடத்தினையும் ஆசியாவில் 3ஆவது இடத்தினையும் இலங்கை பெறவுள்ளமை சிறப்பானதாகும். தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்த தொலைத்தொடர்பு சற்றலைட் உள்ள நாடு என்ற பெருமை இலங்கையைச் சாரவுள்ளது. சீன ஏவுதளத்தில் தயார்நிலைப்படுத்தப்படும் இலங்கையின் புதிய தொலைத்தொடர்பு சற்றலைட் படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.http://www.youtube.com/watch?v=xpkcTbM6Asc