11/20/2012

| |

மட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு

மட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு நேற்று (19.11.2012) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அண்ணாவிமார் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் டி.வாசுதேவன், மண்மனை வடக்கு பிரதேச செயலளார் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் எஸ்.மலர்ச்செல்வன்  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் உட்பட அதிகாரிகள் அண்ணாவிமார் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 66 அண்ணதவிமார் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அண்ணாவியம் எனும் சிறப்பு நூலும் இதன் போது வெளியிடப்பட்டன.