எதிர்வரும் பெப்ரவரி 2013 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தல் இடம்பெற இருக்கின்றது. இவ்வருடம் இடம்பெறுகின்ற மாநகரசபைத் தேர்தலில் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெட்ணம் அவர்களை நிறுத்துவதற்கு உத்தேசியத்துள்ளதாக இரகசிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளராக இரா.துரைரெட்ணம் அவர்களை நியமிப்பதற்கு உயர்மட்டக் கட்சித்தலைமைகள் கூடி ஆராய்து முடிவெடுத்துள்ளமைக்கு சில காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு கடந்த மாகாண சபைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தவர் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என கோரப்பட்டபோதிலும் கட்சித் தலைமையினால் அவர் புறக்கணிக்கப்பட்டு தண்டாயுதபாணி அவர்கள் நியிமிக்கப்பட்டார். இந்த நிலையில் மனம் உடைந்து போயிருந்த துரைரெட்ணம் அவர்கள் அரசுடன் இணைவதற்குரிய முயற்சிகளை கிழக்கில் உள்ள ஒரு அரசியல் தலைவருக்கூடாக மேற்கொண்டும் வந்திருந்தார்.
மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படாததனால் அரசுடன் இணைவதற்கு துரைரெட்ணம் எடுத்த முயற்சிகளை அறிந்து கொண்ட தலைவர் சம்பந்தன் மற்றும் குழுவினர், எதிர்வரும் மநாகரசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக துரைரெட்ணத்தை நியமிப்பதாக வாக்குறுதியளித்தன் பின்னரே அரசுடன் சேரும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதேவேளை துரைரெட்ணம் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதனால் அவர் தமது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதுடன், அதற்கு பதிலாக கடந்த தேர்தலில் போட்டியிட்ட சேயோன் அவர்களுக்கு தமது மாகாண சபை உறுப்பினர் பதவியை வழங்குவதற்கும் தீhமானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த இரகசிய ஒப்பந்தம் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது துiராசசிங்கம் போன்ற மாகாண சபை உறுப்பினர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை.
துரைரெட்ணத்தை மாநகரசபை வேட்பாளராக நியமிப்பதற்கான மற்றைய காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்குள் ஒற்றுமை காணப்படுகினறது என்பதை வெளிப்படுத்துவதற்கும், பிறகட்சிகளை திருப்திப்படுத்துவதற்குமாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இலங்கைத் தமிழரசுக்கட்சி இருப்பதுடன், புளொட், ஈபிஆர்எல்எப், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றபோதும் தமிழரசு க்கடசிக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவராhக சம்பந்தனால் நியிமிக்கட்ட தண்டாயுதபாணி என்பவர் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவராவார். அதேபோன்று சில வெளிநாட்டு பேச்சுவார்த்தைகளில் கூட இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றது.
இத்தகைய நிலையில் கட்சிக்குள்ளே பல உள்முரண்பாடுகள் தலைதூக்கத்தொடங்கின. தமிழத்தேசியக் கூட்டமைப்பினுள் இடம்பெறும் உள் முரண்பாடுகள் ஊடகங்களிலும் வெளிவந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தாம் ஏனைய அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் உரிமைகளை வழங்குகின்றோம், பதவிகளை வழங்குகின்றோம், எமது கட்சிக்குள் ஜனநாயகம் நிலவுகின்றது முதலிவற்றை வெளியுவலகத்திற்கு காட்டவுமே இவ்வாறு ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த துரைரெட்ணம் அவர்களை மாநகரசபை முதல்வர் வேட்பாளராக களமிறக்குவதற்கு சம்பந்தன் குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் துரைராசிங்கத்தையே மாநகரசபை முதன்மை வேட்பாளராக களமிறங்கவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் துரைராசிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர் என்பதுடன் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கடந்த முறை பாராளுமன்ற உறுப்பினர்களால் சிபாரிசும் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தலைமைப்பீடத்தினால் அவர் நிராகரிக்ப்பட்டு திருகோணமலையைச் சேர்ந்த தண்டாயுதபாணி அவர்களுக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தவைர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இத்தடைவை இடம்பெற இருக்கும் மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் மட்டக்களப்பு த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க துiராசிங்கத்தை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, துரைரெட்ணத்தை மீண்டும் புறக்கணிக்குமானால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்து துரைரெட்ணம் அவர்கள் விலகி அரசாங்கத்தில் இணைந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
-ஆராவாணன் -