11/15/2012

| |

த.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் புதிதாக இணைந்து கொண்ட உறுப்பினர்களில் சிலருக்கு இன்று (14.11.2012) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் உறுப்புரிமை வழங்கப்பட்டது. முன்னாள் த.ம.வி.புலிகள் கட்சயின் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபன் அவர்களது 4ம் ஆண்டு நினைவு நாள் நிகழவின் சிறப்பு நிகழ்வாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்புரிமை வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது. கடசியின் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ளவர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது. சுமார் 60 புதிய உறுப்பினர்கள் ஆண் பெண் என இருபாலாரும் பெற்றுக் கொண்டார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிராமங்கள் தோறும் கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதனூடாக கிராமங்கள் தோறும் பல உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு செல்கின்றது.