மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள ஆற்றல் பேரவையினால் ஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் வைபவமும் ஆற்றல் பேரவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் செவ்வாயக்கிழமை (13.11.2012) ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஆற்றல் பேரவையின் தலைவருமான பூ.பிரசாந்தன், மற்றும் ஆரையம்பதி கோட்டக்கல்வி அதிகாரி கந்தசாமி மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி டிக்கிரி பண்டார உட்பட கல்வியலாளர்கள், ஆரையம்பதி முக்கியஸ்த்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆற்றல் பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்கள் பலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் ஆற்றல் பேரவையின் உறுப்பினர்கள் அறிமுகப்படத்தப்பட்டனர். இங்கு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.