11/29/2012

| |

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப்பத்திரிகை வெளீயீடு

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி  கிழக்கு மண் என்ற பெயரில்  வாராந்த செய்திப்பத்திரிகை ஒன்று நேற்று மாலை(27.11.2012) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  வெகுவிமர்சையாக வெளீயீட்டு வைக்கப்பட்டது.
கிழக்கு மண் ஊடக உலகம் எனும் அமைப்பினால் சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.பளுள்ளாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், கிருஸ்னப்பிள்ளை(வெள்ளிமலை) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எம்.எம்.அலிசப்ரி,  சல்மா ஹம்சா  காத்தான்குடி போலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு அதிகாரி டிங்கிரி பண்டார ஆகியோரும்  காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா தலைவர் எஸ்.எம்.அலியார் (பலாஹி), மட்டக்களப்பு மன்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோர் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உயர் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள்,  இலக்கியவாதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வின் வரவேற்புரையை ‘கிழக்குமண்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞரும் பிரபல ஊடகவியலாளருமான ரீ.எல். ஜவ்பர்கான் நிகழ்த்தினார். கிழக்கு மண் பத்திரிகையின் முதற்பிரதியும் இதன் போது வெளியீட்டு வைக்கப்பட்டது.