வன்னியை ஆண்ட கடைசி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு தினமான இன்று புதன்கிழமை நினைவு தினம் மக்களின் வெளிநடப்புக்கு மத்தியியல் இடம்பெற்றது.
நகரசபை தலைவர் ஐ.கனகையா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர் மாலை மாலை அணிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் 'பண்டாரவன்னியனின் வரலாற்று பார்வை' என்னும் தலைப்பிலான உரை அருணா செல்லத்துரையினால் வழங்கப்பட்டதுடன் பிரமுகர்களின் உரைகளும் இடம்பெறறன.
இதனைத் தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் 'பண்டாரவன்னியனின் வரலாற்று பார்வை' என்னும் தலைப்பிலான உரை அருணா செல்லத்துரையினால் வழங்கப்பட்டதுடன் பிரமுகர்களின் உரைகளும் இடம்பெறறன.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
அனைத்து இன, மத மக்களையும் ஒன்றுதிரட்டி அரசியல் கலப்பின்றி வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் அறங்காவற்குழுவும் பண்டாரவன்னியன் நினைவு தினத்தினை நடத்துவதற்கு எற்பாடு செய்து நிகழ்வுகளை நடத்தியபோது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் வருகை தந்த சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இவ் விழா இடம்பெறவேண்டுமெனவும் அது தொடர்பாக தாம் கொண்டு வந்திருந்த பதாகையை இட வேண்டுமெனவும் ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டனர்.
எனினும் பண்டாரவன்னியன் அறங்காவல்குழு அவ்வாறு பதாதை அமைக்கப்பட்டால் அரசியல் மயப்படுத்தப்பட்டுவிடும் எனவே அதனை தவிர்க்குமாறும் அவ்வாறு அமைத்தால் தாம் வெளியேறுவதாகவும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர்.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதாதை அமைக்கப்பட்டதை அடுத்து அறங்காவல் குழுவும் சில பொது மககளும் தாம் அரசியல் கலப்புள்ள நிகழ்வில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்து வெளியேறியிருந்தனர்.
நிகழ்வில் நகரசபையினர் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களில் ஒரு சாரார் என்பதனால் நிகழ்வினை ஒரு சிலருடன் நடத்தியிருந்தனர். ஆனாலும் சில நிகழ்வுகளில் பங்குபற்றியவர்கள் தாம் பங்குபற்ற விரும்பவில்லை என தெரிவித்து வெளியேறியிருந்தனர். நிகழ்வுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுபபினர்கள் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தது.
எனினும் வவுனியா நகரசபையினர் சிறு தொகை மக்களுடன் நிகழ்வினை நடத்தியிருந்தனர்.