வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்ட 41 தொலைபேசிகள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
இதன் போது சட்டவிரோதமான பொருட்களும் விசேட அதிரடிப்படையினால் கைப்பற்றப்பட்டது. அதன்படி 41 தொலைபேசிகளும் 18 கிராம் போதைப்பொருளும் 22 சிம் காட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் போதைப் பொருள் கடத்தல்களை செய்தவர்கள் சிநைக்குள் இருந்தும் வெளியில் உள்ள நண்பர்களுடன் தொடர்புகளை வைத்திருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். எனவும் அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்காவின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தான் விசேட அதிரடி படையினரின் உதவியை கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரைக் கோருவது என்பது சிறைச்சாலை சட்டத்தின் பிரிவு 77ஆம் சரத்தின் படி சட்ட ரீதியானதாகும் என அவர் குறிப்பிட்டார்.
எனினும் வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரத்தினையடுத்து அது தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக் கொள்ள நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு, இதன் பின்னணியில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் குறிப்பிட்ட அதேவேளை, இந்த மூவர் குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவான ஜோன் அமரதுங்க, இதற்கென ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டதுடன் 10 மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இதில் கைதிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் அடங்குகின்றனர்.
எனினும் மோதலில் 16 பேர் மாத்திரமே முதலில் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிசெய்திருந்தனர். ஆனாலும் மறுநாள் இறப்பின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் இறந்த அனைவரும் கைதிகளே என பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் அறிவித்திருந்தார். எனினும் இறந்த கைதிகள் சிலரின் பெற்றோர் தங்களது பின்ளைகள் 10 ஆம் திகதி காலை 4 மணிவரை தம்முடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.