11/18/2012

| |

40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்


புகலிட இலக்கிய ஆர்வலர்களின் கவனத்திற்கு
தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 39வது சந்திப்பானது கனடாவில் நடைபெற்றது. 40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பத்தை சிலரும், இலண்டனில் நடத்துவதற்கான விருப்பத்தை சிலரும் 39வது இலக்கியச்சந்திப்பில் முன்வைத்தபோது, 40வது இலக்கியச்சந்திப்பு இலண்டனில் நடைபெறும் என்பதாகவே முடிவெடுக்கப்பட்டிருந்தது.
பிரான்சில் நடைபெற்ற 38வது இலக்கியச் சந்திப்பின் இறுதியில் 39வது சந்திப்பை இலங்கையில் நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டபோது, நோர்வேயில் நடைபெற்ற 37வது சந்திப்பில் கலந்துகொண்ட சுமதி ரூபன் அவர்கள் 39வது சந்திப்பை கனடாவில் நடத்த விருப்பம் தெரிவித்த சம்பவம் நினைவுறுத்தப்பட்டு அவ்வாறே 39வது சந்திப்பு கனடாவில் நடைபெற்றது.
இலக்கியச் சந்திப்பின் தொடர்ச்சியை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பத்தை பிரான்சில் நடைபெற்ற 38வது இலக்கியச்சந்திப்பிலேயே அனைவரும் அறிந்திருந்தார்கள். இருந்தபோதும் 40வது இலக்கியச் சந்திப்பை இலண்டனில் நடத்துவதற்கான தமது விருப்பத்தை நண்பர்கள் கோரியிருந்தார்கள். தற்போது இலண்டனில் தாம் செய்யமுடியாத சூழல் இருப்பதாக அவர்கள் தெரிவித்த பட்சத்தில் 40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடைபெற இருக்கின்றது.
இலங்கையில் நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களது பெயர் விபரம் கீழே தரப்பட்டடிருக்கின்றது. புகலிடத்தில் இலங்கையில் நடத்துவதற்கு விருப்பமும், ஒத்துழைப்பும் தரும் சிலரது பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் இணைந்து செயல்படுவதற்கும், நிகழ்ச்சிகள்  செய்வதற்கு ஆர்வமுள்ளவர்களும்  கீழ்காணும் மின் அஞ்சல்மூலமாக தொடர்புகொள்ளவும். 2013 ஆண்டு யூலை, ஆகஸ்ட் மாதங்களே புகலிடத்தில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என அதிகமானவர்கள் கருதுகின்ற பட்சத்தில் அக்காலங்களிலேயே இலங்கையில் இலக்கியச்சந்திப்பை நடாத்த உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது. திகிதி விபரங்கள் பின்பு அறிவிக்கப்படும்.
இலங்கையிலுள்ள நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக்குழு
————-
1 சோதிதாசன் – (இலக்கியகுவியம்) யாழ்ப்பாணம்
2 ஆத்மா (கவிஞர்) – மட்டக்களப்பு
3 லெனின் மதிவாணன் (படைப்பாளி) – தென்இலங்கை
4 நவாஸ் – (கவிஞர்)மட்டக்களப்பு
5 கருணாகரன் (படைப்பாளி) – கிளிநொச்சி
6 யோ.கர்ணன் (படைப்பாளி) – யாழ்ப்பாணம்
7 வாசுகி (இலக்கிய, சமூக ஆர்வலர்) – யாழ்ப்பாணம்
8 தமிழ் அழகன் (சமூகசெயல்பாட்டாளர்) – யாழ்ப்பாணம்
9 வேல்தஞ்சன் (சமூகசெயல்பாட்டாளர்) – யாழ்ப்பாணம்
10 வசீம் அக்ரம் – (படைப்பாளி) மட்டக்களப்பு
11 திசோரா – (படைப்பாளி) மட்டக்களப்பு
————-
புகலிடத்து நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக்குழு
1 தேவதாசன் – பிரான்ஸ்
2 அசுரா- பிரான்ஸ்
3 கற்சுறா – கனடா
4 ஜீவமுரளி – ஜேர்மனி
5 ராகவன்- இலண்டன்
(மேலும் ஆலோசனைக்குழுவில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவும்)
புகலிடத்திலிருந்து ஒத்துழைப்பவர்களும்,  இதில் கணிசமானவர்கள் இலங்கைக்கு வந்து கலந்து கொள்ளவும் ஆர்வமுள்ளவர்கள்.
1 ஸ்ராலின் – பிரான்ஸ்
2 விஜி – பிரான்ஸ்
3 சோபாசக்தி – பிரான்ஸ்
4 சுந்தரலிங்கம் – பிரான்ஸ்
5 யோகரட்ணம் – பிரான்ஸ்
6 அதீதா – கனடா
7 உமா – ஜேர்மனி
8 சந்தோஸ் – இலண்டன்
9 தமயந்தி – நோர்வே
10 பானுபாரதி – நோர்வே
11 கீரன் – இலண்டன்
12 ரெங்கன் – இலண்டன்
13 ஜோர்.இ.குருஷேவ் -  கனடா
14 பாபு பரதராஜா – கனடா
15 பேராதரன் – கனடா
16 மெலிஞ்சி முத்தன் – கனடா
17 அரவிந் அப்பாத்துரை -பிரான்ஸ்
18 சபேசன் – கனடா
தொடர்புகளுக்கு : ilakkiyachchanthippu40@gmail.com