11/19/2012

| |

முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் கைது. 25 கிலோ கிளேமோர் மீட்பு.

திருக்கோயில் பிரதேசத்தில் முன்னாள் புலிகள் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 25 கிலோ எடைகொண்ட கிளேமோர் குண்டொன்று 5 துப்பாக்கிகள் 1 கைத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் அறையின் நடுவே குழிவெட்டி இவ்வாயுதங்கள் மறைக்கப்பட்டு மேலே சீமெந்து பூசி செப்பனிடப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்டகப்பட்டுள்ளது. 

புலிகளியக்கத்திலிருந்து இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து அரசினால் வழங்கப்படும் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்று வெளியே வந்துள்ளோரும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர். 

இவர்கள் தாம் புலிகளியக்கத்தில் இருந்தபோது பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை அண்மையில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களுக்கு விலைக்கு விற்றுள்ளனர். இவ்வாறு விற்கப்பட்ட ஆயுதங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் மாட்டியுள்ளது. 

ஆயுதங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது விற்றவர் முன்னாள் புலி உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த ரிஐடி எனப்படுகின்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்ரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் கைதாக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரியவருகின்றது. 

கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பிரதான நபரான கிறிஸ்டி எனப்படுகின்ற முன்னாள் புலி உறுப்பினர் யுத்தம் முடிவடையும் காலகட்டத்தில் இயக்கத்திலிருந்து மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து இனியபாரதியை தொடர்பு கொண்டு தான் நாடுதிரும்பி இயல்பு வாழ்வுக்கு செல்வதற்கு உதவுமாறு கேட்டுள்ளார். கிறிஸ்டியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்த பாரதி அதற்கான ஏற்பாடுகளை செய்ய நாடு திரும்பிய அவர் தான் முன்னர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பலவற்றையும் படையினரிடம் கையளித்துள்ளார். அத்துடன் இவ்வாறு ஆயுதங்ளை மறைத்து வைத்திருக்கும் தனது சகாக்கள் தொடர்பான பல பெறுமதியான தகவல்களையும் இவர் வழங்கியிருந்தாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. ஆனால் அவர் முழு ஆயுங்களையும் வழங்கியிருக்கவில்லை என்பது தற்போது வெளியாகியுள்ளது. 

இருடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் கோணேஷ் , வீரா என்கின்ற இருவரும் அடங்குகின்றனர். வீரா புலிகளின் ஸ்னைப்பர் பிரிவில் இருந்தவர் எனவும் பல தாக்குதல்களில் ஈடுபட்டவர் எனவும் அறியக் கிடைக்கின்றது. 

முன்னாள் புலிகள் இவ்வாறு மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் பிரதேசங்களில் ஆங்காங்கே இடம்பெறும் கொள்ளைகளுக்கு பயன்படுத்தபடுவதுடன், இவ்வாயுத நடமாட்டம் தொடர்பில் மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். 

அத்துடன் புலிகளால் முஸ்லிம்களுக்கு விற்கப்படும் ஆயுதங்கள் தமிழருக்கு எதிராவே பயன்படும் என தமிழ் முஸ்லிம் எல்லக்கிராமங்களிலுள்ள தமிழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 


இப்படத்தில் உள்ளவர் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிகளில் ஒருவரான கோணேஷ். இவரின் கைது தொடர்பாக சில ஊடகங்கள் ஊளைவிடுவதனை அவதானிக்க முடிகின்றது. இவர் புலிகளிலிருந்து சரணடைந்து புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டவராம். அவரையும் புலனாய்வுப்பிரிவு கைது செய்து விட்டதாம். முன்னாள் புலிகள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக குற்றவாளிகள் என்றாலும் அவர்கள் கைது செய்யப்படக்கூடாது என்ற எம்மவரின் எழுதப்படதாக சட்டம் தமிழ் மக்களை மேலும் சிக்கலுக்குள் கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.