11/15/2012

| |

நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; நீதியரசர்

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
நீதியரசர் மீதாது சுமத்தப்பட்டுள்ள குற்றப் பிரேரணை தொடர்பிலான விசாரணைகளுக்காக பிரதம நீதியரசர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
அத்துடன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் 22ம் திகதிக்கு முன்னதாக சிரானி பண்டாரநாயக்க அது குறித்து விளக்கமளிக்க வேண்டுமெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.