11/09/2012

| |

அரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வேலைநிறுத்தக்காரருக்கு மாதம் ரூ. 5000

வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், கைத்தொழில் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள்; நிவாரணங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் 8வது வரவு செலவுத் திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றம் நேற்று நண்பகல் 12.50 க்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியபோது நிதியமைச்சரென்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.
நண்பகல் ஒருமணிக்கு தனது வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி, சரியாக பி. ப. 3.35க்கு தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், விவசாயிகள், சிறுதொழில் முயற்சியாளர்கள், படை வீரர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், வெளிநாட்டில் பணிபுரிவோர், உள்ளூர் உற்பத்தியாளர்கள், பெருந்தோட்டத் துறையினர் அடங்கலான பல பிரிவினர் நன்மையடைகின்றனர்.
2013 ஆண்டிற்கான இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் முன்மொழிவுகளும் வருமாறு :