மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்,உதவி மாவட்ட அரசாங்க அதிபர் வாமதேவன்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன்,கணக்காளர் நேசராசா மற்றும் பிரதேச செயலாளர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.
இதன்போது முதியோர் தினத்தையொட்டி மாவட்ட ரீதியில் பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த 58 முதியோர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்தமுறையில் செயற்படும் முதியோர் சங்க நிர்வாகத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.