சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டம் 12ம் நாள் ஜப்பானிய டோக்கியோ நகரில் நடைபெற்றது. சீன மக்கள் வங்கித் துணை தலைவர் யீ காங்கும், சீனத் துணை நிதி அமைச்சர் ட்ச்சு குவாங் யாவும் சீன அரசின் பிரதிநிதிக்குழுவுக்குத் தலைமை தாங்கி இக்கூட்டதத்தில் கலந்து கொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிறிஸ்டீன் லெகாடே அம்மையாரும், உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம்மும் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர். புதிதாக வளர்ந்து வரும் நாடுகள், வளரும் நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் ஆகியவை ஒத்துழைக்க சிறந்த மேடையை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் என்றும், பல்வேறு தரப்புகளும் கூட்டாக ஒத்துழைத்து, எதிர்காலத்தில் உலகப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் முறையை ஆராய வேண்டும் என்றும் லெகாடே அம்மையார் தெரிவித்தார். தற்போது உலகப் பொருளாதாரத்தில் முக்கிய அறைகூவல்கள் ஏற்பட்டுள்ளன என்றும், பல்வேறு தரப்புகள் நெருக்கமாக ஒத்துழைத்து, வறுமை ஒழிப்புக்காக பாடுபட வேண்டும் என்றும் ஜிம் யோங் கிம் தெரிவித்தார்.