10/01/2012

| |

கிழக்கு மாகாண சபையின் முதல்நாள் அமர்வு இன்று. தவிசாளர் ஆரியவதி கலபதி- உபதவிசாளர் சுபைர்

திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசித்து அங்கீகரிக்கப்பட்டு. சம்பிரதாய பூர்வமாகக் கூடியது.
சபையில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தெரிவு கோரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முன்மொழிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் அதை வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து பிரதித் தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது.
இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியது என புதிய தவிசாளர் ஆரியவதி கலப்பதி தெரிவித்துள்ளார்.