10/18/2012

| |

லிபிய அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு நான் பொறுப்பேற்கிறேன்: ஹில்லாரி

லிபியாவின் பெங்காஸி நகரில் செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தானே பொறுப்பேற்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் கூறியுள்ளார்.
நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி அமெரிக்கர் ஒருவர் எடுத்த டாக்குமென்டரி படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். லிபியாவில் பெங்காஸியில் அமெரிக்க தூதரகத்தை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டு தாக்கினர். இதில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்ளிட்ட 4பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சி.என்.என் டிவிக்கு ஹில்லாரி அளித்த பேட்டியில், இந்த சம்பவத்திற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
பெங்காஸி சம்பவத்தால் ஒபாமா அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்க தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை ஒபாமா அரசு சரிவர கையாளவில்லை என்று அமெரிக்காவில் அதிருப்தி நிலவுகிறது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி கூட இந்த விவகாரத்தில் ஒபாமாவை கடுமையாக சாடி வருகிறார்.
இந்த விவகாரத்தை சமாளிக்கவும், இஸ்லாமியர்களை சமாதானப்படுத்தவும் அதிபர் ஒபாமா வீடியோ மூலம் உரையாற்றி அதை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பவும் செய்தார். இந்த பின்னணியில் தற்போது பெங்காஸி சம்பவத்திற்கு தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளார்.