10/23/2012

| |

கடல் தாக்குதலை கண்டறிய இன்டர்போலின் உதவி

தெவிநுவரவுக்கு அப்பால் நடுக்கடலில் இடம்பெற்ற திகில் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது மூன்று மீனவர்கள் காணாமல் போனதுடன் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்;றின் மீது தோணியொன்றில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இம்மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரோலர் படகில் இருந்தவர்களை தோணியில் வந்தவர்கள் தாக்கியபோது, ரோலர் படகில் தலைவரும் அவர்களுடன் சேர்ந்து ரோலரில் இருந்தவர்களைத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலின் போது இவர்கள், ஐந்து மீனவர்களை கடலில் வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தோணியில் வந்தவர்களில் இருவர், தங்காலைக்கு திரும்பிவிட ஏனைய சந்தேகநபர்கள் ரோலரின் தலைவருடன் சேர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு போய்விட்டதாக அறியப்படுகின்றது. கடலில் வீசப்பட்டு காணாமல் போயுள்ள மூன்று கடற்றொழிலாளர்களை கடற்படையினர் தேடி வருகின்றனர்.

கடலில் வீசப்பட்டவர்களில் இருவர், இரு வணிகக் கப்பல்களில் பயணித்தவர்களால் காப்பாற்றப்பட்டு கராபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.