10/23/2012

| |

கிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமம் ரத்து!


கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமத்தை இந்திய விமான போக்குவரத்து ஆணையம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 8 மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிங் ஃபிஷர் நிறுவனததிற்கு 7,524 கோடி ரூபாய் கடன்பாக்கி உள்ளது.இதனால் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்க முடியாமல் அந்நிறுவனம் திணறி வந்தது.
இந்நிலையில் விமானிகளும் சரிவர வேலைக்கு வரவில்லை.
இதனால் இந்த மாதம் 1 ம் தேதி முதல் கிங் ஃபிஷர் நிறுவனம் விமானங்களை இயக்கவில்லை.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய விமான போக்குவரத்து ஆணையம்,கிங் ஃபிஷர் நிறுவனத்தை கேட்டிரு்ந்தது.
இந்நிலையில் கிங் ஃபிஷர் நிறுவனம் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை என்று கூறி அதன் உரிமத்தை ரத்து செய்து விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிங் ஃபிஷர் நிறுவனத்தின் தலைவராக பிரபல மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய மல்லையா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.