கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் காலங்காலமாக கால்நடைகளை மேய்த்து வந்த குறிப்பிட்ட சில இடங்களுக்கு அவர்கள் செல்ல முடியாத ஓர் நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் குறித்த கால்நடை வளர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது கையொப்பம் இடப்பட்ட மகஜர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம் , துரைராஜசிங்கம் ஆகியோரிடம் கையளித்திருந்தார்கள்.
குறித்த மகஜர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு உறுதியான பதிலையும் வழங்காத பட்சத்தில், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கால்நடை வளர்ப்பாளர்கள் மகஜரது பிரதி வழங்கி அதற்கான தீர்வை பெற்றுத் தரும்படி கோரியிருந்தார்கள்.
குறித்த மகஜர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு உறுதியான பதிலையும் வழங்காத பட்சத்தில், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கால்நடை வளர்ப்பாளர்கள் மகஜரது பிரதி வழங்கி அதற்கான தீர்வை பெற்றுத் தரும்படி கோரியிருந்தார்கள்.
இது தொடர்பில் ஆராய்ந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் உரிய அதிகாரிகளுடன் பேசி இன்று(18.10.2012) குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று அதவாது கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக கொண்டு செல்கின்ற இடங்களான மட்டக்களப்பின் எல்லையான மாந்திரி ஆறு உள்ளடங்கலாக மயிலத்தமடு,பாலவெட்டுவான், மாதவளை போன்ற இடங்களுக்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் சகிதம் சென்று உடனடியாக அப் பிரதேசங்களில் வழமை போன்று தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்கான அனுமதியினை பெற்றுக் கொடுத்தார்.
இதனால் மிகவும் சந்தோசமடைந்த கால்நடை வளர்ப்பாளர்கள் மியான்குளம் 9ம் கட்டையிலுள்ள பாற்பண்ணை வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு தொடர்ந்து இது தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளுக்கு முன்னாள் முதல்வர் அவர்களே முன்னின்று எங்களுக்கு செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
இந்த களவிஜயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி அரசாங்க அதிபர், மாவட்டசெயலகத்தின் காணித் திட்மிடல் அதிகாரி திருமதி ஈ. குகதா, கிரான் பிரதேச செயலகத்தின் காணி அதிகாரி, கிராம சேவையாளர் குருநாதன், கோறளைப்பற்று பிரதேச பபையின் தவிசாளர் உதயஜீவதாஸ், செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் எஸ். வினோத், வவுணதீவ பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்பிரமணியம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா, காலந்டை வளப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், பாற்பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உட்பட விவசாயிகளும் கலந்து கொண்டார்கள்.
வெறுமனே வெட்டிப் பேச்சு பேசும் துரைராஜசிங்கம், தொடர்ந்து மடல் வரையும் துரைரெட்ணம் எல்லாம் இதனைப் பார்த்து வெட்கப்படவேண்டும். ஏன் என்றால் குந்திக் கொண்டு கொக்கரிக்காமல் உரிய இடத்திற்கு நேரில் சென்று தீர்வை பெற்றுக் கொடுக்க சந்திரகாந்தனைப் பார்த்தாவது பழகுங்கள். உங்களுக்கு எங்க இதெல்லாம் உறைக்கப் போகுது!