10/27/2012

| |

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம்

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பலத்தகாற்று வீசக்கூடுமெனவும் குறிப்பாக கிழக்கு கடற்கரைப் பகுதியில் இது அதிகமாக இருக்குமெனவும் எனவே, கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது.
இதேவேளை, இரவு வேளைகளில் நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.