ஏகோபித்து வாக்குகளைப் போட்டு தமிழ் மக்களின் தலைமையாக எங்களை அனுப்பி வையுங்கள் என்று கேட்டு வாக்குகளைக் கவர்ந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் அளித்த நம்பிக்கைக்குப் பாதகமாகவே தொடர்ந்து நடந்து கொண்டது இப்போது தெளிவாக அம்பலப்பட்டுப் போயிருக்கிறது.
13-வது திருத்த அரசியல் சட்டத்தையும் காப்பாற்றிக்கொள்ள எங்களால் முடியாது, சர்வதேசமும் இந்தியாவும் ஏதாவது செய்தால்தான் உண்டு என்று கைவிரிப்பதோடு தாங்கள் மெல்லக் கழன்றுவிடலாம் என நினைக்கிறார்கள். இதற்காகவா தமிழ் மக்களின் தலைமைப் பதவி கேட்டு இத்தனை காலம் தமிழ் மக்களை ஏமாற்றி வந்தார்கள்?
நாம் திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லிவந்தோம். இவர்களது வெத்துவேட்டான எதிர்ப்பரசியலை சிங்களப் பேரின வாதிகள் மிக வாஞ்சையோடு தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்தி வருகிறார்கள் என்பதை, இவர்கள் தங்களை நம்பிய மக்களது நலன் சார்ந்த அக்கறைகொண்டு தங்கள் மண்டையில் ஏற்றிக்கொள்ளவே இல்லை. வெற்றுக் கோஷங்களை எழுப்பியபடி தங்கள் பதவிகளை மட்டுமே பத்திரமாகப் பாது காத்து வந்தார்கள்.நியாயமான பேச்சின் மூலம் எடுத்திருக்கக் கூடிய தீர்வுகளை எல்லாம் விதண்டாவாதம் பேசி இவர்கள் குழப்பியே வந்தார்கள். வடக்கு கிழக்கு இயைந்த சமஷ்டிக்கு நெருக்கமான சந்திரிகாவின் தீர்வைக் குழப்பிவிட்டு வந்து வெறும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு கோஷம் போட்டு வாக்குகளைக் கேட்பார்கள். இதன்மூலம் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் எதிரான தீவிர உணர்வுகளை சிங்கள தேசியவாதிகள் மத்தியில் எழுப்பிவிட்டு, இவர்களும் அதைக் கைவிடுவார்கள். வடக்கு கிழக்கில் தனித் தனியாகவேனும் கதிரைகளைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கி விடுவார்கள்.

பிறகு, இவர்கள் கல்லாப்பெட்டி சிங்காரம் ஒரு படத்தில் வீரம் பேசியதுபோல, மற்றதெல்லாம் பரவாயில்லை, ஆனால் 13-வது திருத்தத்தில் கைவைத்தால் தெரியும் சங்கதி என்று சிங்களப் பேரினவாதிகளைச் சும்மா உசுப்பேற்றுவார்கள். அவர்களும் இதற்காகவே காத்திருந்தது போல 13-வது திருத்தத்தை உடனடியாக நீக்கிவிட வேண்டும் என்பதில் வந்துநிற்பார்கள்.
இவர்கள் கைகளை மேலே தூக்கி, 13-வது திருத்தமும் போகுதே, சர்வதேசமும் இந்தியாவும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறதா என்று வீரத்தை ஒப்பாரியாக மாற்றுவார்கள். சர்வதேசமும் இந்தியாவும் என்னதான் சொல்லப் போகின்றன? தங்களது சொல்லுக்கு இலங்கை அரசு மதிப்பளிப்பதாகக் காட்டிக்கொள்கிறதா, அது போதும் அவர்களுக்கு. 13-வதில் குறைக்க வேண்டியதைக் குறைத்துவிட்டு 19-வது திருத்தமென்றாலும் முதலில் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொடுத்ததாகக் காட்டுங்கள் என்பார்கள்.

கூட்டமைப்பினரோ சர்வதேசம் சொல்வது காதில் விழாதது போலவே, பழசெல்லாவற்றையும் எங்கோ விட்டுவிட்டு, 13-வது இல்லாவிட்டால் அவ்வளவுதான், எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை யோசிக்க வேண்டிவரும் என்று வழக்கம்போலப் பூச்சாண்டியை எடுத்து விடுவார்கள். அதற்காகவே காத்திருந்த சிங்களப் பேரினவாதிகள், 19-வது திருத்தமும் நாட்டுக்கு எதிரானது நீக்க வேண்டும் என்று தொடங்குவார்கள்.
தமிழ்த்தலைமை என்று சொல்லப்படுகிற இவர்கள் அடுத்த படியில் இறங்கிப்போய் நின்று, 19-வது திருத்தம் மட்டும் இல்லாவிட்டால் தமிழ்ப்பகுதிகளில் எரிமலை வெடிக்கும் என்று வீரத்தை வெளிப்படுத்துவார்கள். நமது மக்களுக்குத் தேவையானதைப் பேசவோ எடுக்கவோ கூடிய ஒரு தலைமையே தமிழ்த் தலைமை என்றாக வேண்டும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியதே அவசரத்தேவை. * thinamurasu