புராமோஸ் எனும் ஒலியின் வேகத்தை விட விரைவாகச் சென்று தாக்கும் ஏவுகணை ஆராய்ச்சியை ரஷியாவும் இந்தியாவும் மேலும் கூட்டாக முன்னேற்றும் என்று ரஷிய செய்தி ஊடகங்கள் 12ம் நாள் அறிவித்தன.
இவ்வாண்டின் இறுதிக்குள் நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து செலுத்தக் கூடிய புராமோஸ் ஏவுகணை சோதனை முறையில் செலுத்தப்படும். அதன் முடிவின் படி இவ்வேவுகணையைப் பொருத்துகின்ற பணிகள் பற்றி இந்தியத் தரப்பு தீர்மானிக்கும். மேலும் விமானங்களில் பொருத்தப்படும் மிகப் புதிய ரக புராமோஸ் ஏவுகணையை 2013ம் ஆண்டு சோதனை முறையில் செலுத்துவதென இரு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்தப் புதிய ரக ஏவுகணை SU-30MKI போர் விமானங்களில் பொருத்தப்படும்.
1998ம் ஆண்டு முதல் ரஷியாவும் இந்தியாவும் புராமோஸ் ஏவுகணை ஆராய்ச்சியில் ஒத்துழைக்கத் துவங்கின என்பது குறிப்பிடத்தக்கது.