மட்டக்களப்பில் நேற்று அரம்பிக்கப்பட்டBITE -2012 சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் உள்ளூர் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் வழங்கிவைக்கப்பட்டதுடன் இலங்கை கட்டட நிர்மான ஸ்தாபனத்தினால் கட்டட நிர்மானத்துடன் தொடர்பான தறை சார்ந்தவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக இடம்பெறும் இவ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை பெருந்திரளான கைத்தொழிலாளர்கள், வர்த்தகர்கள்,பொது மக்கள் சென்று பார்வையிட்டு வருவதுடன் கட்டிட நிர்மகன ஸ்தாபனத்தினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து நடாத்தப்படும் கட்டட நிர்மானத்துடன் தொடர்பான வர்ணம் பூசுதல்,கூரை அமைத்தல்,மின்னிணைப்பு உள்ளிட்ட பயிற்சிகளில் துறைசார்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.