"ஆசியக் கண்டமானது எமது செல்வம், இயற்கை வளங்கள், மனித வளங்கள் என்பவற்றை சூறையாடும் எண்ணத்துடன் செயற்பட்டுவரும் எந்தவொரு சக்தியின் விளையாட்டரங்காக இருக்க முடியாது" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
"எமது கலாசாரத்தை அடிப்படையாக வைத்து நாம் வளர்ச்சியடைய வேண்டும். எமக்கு மனசுத்தியுடன் உதவ முன்வருபவர்களின் நற்பணிகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குவைத் நாட்டில் நடைபெற்ற ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டத்தொடர் உச்சிமாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
ஆசியாவின் சுதந்திரத்திற்கு பல்வேறு எல்லைகளில் இருந்தும் பல திசைகளில் இருந்தும் சவால்கள் எழும்போது நாம் எமது சுதந்திரத்தை மீளப்பெற்று அதனைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்க வேண்டும். கலாசார பாரம்பரியங்கள், வலுவான வரலாறு எமது பலம்பொருந்திய மனித வளங்களை பயன் படுத்தி ஆசிய நாடுகள் தங்களைக் கட்டியெழுப்புவ தில் வெற்றி காணவேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஆசியக் கண்டத்தை வளமாக்கி அபிவிருத்தி செய்வதற்கான எமது பேரவாவுக்கு எல்லை இல்லை. ஆசிய கண்டத்தை பொருளாதார அரசியல், சமூக, தொழிநுட்ப, மனிதவள செயற்திறன் போன்றவற்றில் தன்னிறைவை அடையச் செய்யும் வரை எங்கள் இலட்சியம் நிறைவுபெறாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதுவரை நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அடித்தளமாக வைத்து திடமான மனதுடன் தொடர்ந்தும் முயற்சிகளை செய்து எங்கள் நாட்டில் மகோன்னதமான வரலாற்றை அடித்தளமாக வைத்து எதிர்காலத்தில் நம்பிக்கையையும், உறுதி மொழிகளையும் நாம் பெறவேண் டும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளா தாரமும் வருமானத்தினாலும் ஆசியா உலகின் மிகவும் நம்பிக்கையை ஊட்டும் சந்தையாக இருந்துவருகிறது. எங்களிடம் கைவசமுள்ள பெருமளவு இயற்கை வளங்களை பயன்படுத்தி உணவுத் தட்டுப்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு சவால்களை வெற்றிகொள்ள வேண்டும்.
எமது பாரம்பரிய ஏற்றுமதிகளுக்கு அச்சுறுத்தல்கள் தோன்றியிருக்கின்றதென்றும் இதற்கு உலகில் பொருளாதார மந்த நிலையே காரணம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆசிய நாடுகள் பயங்கரவாதம் என்ற தீய அரக்கனையும், கடற்கொள் ளையர், காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்கள், சுற்றாடல் அசுத்தமடைதல், சமூக விரோத நடவடிக்கைகள் போன்ற சவால்களினூடான அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டி இருக்கின்ற போதிலும் இந்த சவால்களை நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் முகம் கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
எங்கள் நாட்டைப் போன்ற பல வளர்முக நாடுகள் எண்ணெய் விலை ஏற்றத்தால் பெரும் பளுவை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றன. இதனால் எங்கள் நாடுகளின் வளங்கள் பெரும் சுமையை எதிர்நோக்குகின்றன. இது எங்கள் நாட்டின் நீண்ட கால திட்டங் களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஆசியாவின் வளமும், பலதரப்பட்ட பாரம்பரிய பெறுமதிகளும் எங்களுக்கு இருக்கின்றன. ஆசியாவின் பல நாகரீகங்கள் தழைத்தோங்கி இருக்கின்றன. ஆசிய நாடுகளில் உணவு, எரிசக்தி, கல்வி, மனிதசக்தி, கைத்தொழில் உற்பத்தி ஆகியன உலகில் மற்ற நாடுகளுக்கு இல்லாத அளவு இருக்கின்றன என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் “எனது அரசாங்கத்தின் அபிவிருத்திக் கட்டமைப்பின் மூலம் நாம் அடைந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இப்போது விரும்புகிறேன். மஹிந்த சிந்தனை எண்ணக்கருவுக்கு அமைய எனது அரசாங்கம் திறந்த சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தை உள்ளூர் அபிலாஷை களுக்கு ஏற்புடைய வகையில் நடைமுறை ப்படுத்தி வெற்றியடைந்து வருகிறோம்.
கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறிய நடுத்தர அளவி லாள தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்து அவற்றை எமது பொருளாதாரத்தின் மத்திய தூண்களாக கட்டியெழுப்பி உள்ளூர் தொழில் முயற்சிகளுக்கு ஊக்குவிக்கும் அதே வேளையில் வெளிநாட்டு முதலீடுகளையும் வரவேற்றிருக்கிறோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகை யில்; நாம் வறுமையொழிப்பு திட்டத்துக்கு முன்னுரிமையளிப்பதுடன் தகவல் தொழில் நுட்பம் கிராமிய மக்களை வலுவூட்டுதல் அதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றிற்கான கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கு பெருமளவு பணத்தை செலவிடுகிறோம் என்றும் கூறினார்.
இலங்கையில் இன்று உல்லாசப் பிரயாணத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இது வேலை வாய்ப்பை உருவாக்கி அதனை நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கும் உதவியாக இருக்கிறது. இதன் மூலம், கிராமிய மக்களின் வேலைவாய்ப்பு அதிகரித்து அவர்களின் வருமானமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.