10/01/2012

| |

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் அரசு கட்சிக்கு மாத்திரம் அனுமதி கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு

இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் முதல்நாள் நிகழ்வு இன்று ஆரம்பமானது.இதில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஆரியபதி கலபதி அவர்களும் பிரதி தவிசாளராக எம்.எஸ்.சுபைர் அவர்களும் .
பின்னர் ;கட்சி தலைவர்களுக்கான விசேட கூட்டம் தவிசாளரின் அறையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தயாகமகே மற்றும் தமிழரசுக் கட்சி சார்பில் தண்டாயுதபாணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் துரைரெட்ணம் ரெலோ சார்பில் ஜனா மற்றும் த.வி.கூட்டணி சார்பில் வெள்ளிமலை எனப் பலர் கலந்து கொண்டார்கள். கிழக்கு மாகாண சபையினை பொறுத்தவரையில் கட்சித் தலைவர்கள் என்பது தேர்தலிலே எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்;டியிடுகின்றார்களோ அந்த கட்சி சார்பில்தான் கலந்து கொள்ள முடியும். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டடைமப்பை பொறுத்தவரை அது ஓர்; பதிவு செய்யப்ட்ட கூட்டுக் கட்சி .எனவே அதனுள் அங்கம் வகிக்கின்ற எந்தக்கட்சிகளும் பங்கு பெற முடியும்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது அப்படியானதொரு கூட்டு கட்சி அல்ல. காரணம் அது இதுவரை பதிவு செய்யப்படாத ஓர் கூட்டுக் கட்சியாகவே இருக்கிறது. எனவே அது பதிவு செய்யப்பட்டால் மாத்திரம்;  எதிர்வருகின்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். இல்லையாயில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தழிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தண்டாயுத பாணி மாத்திரம் கலந்து கொள்ள முடியும். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகிய நிலையில் காணப்படுகிறது.
அதே வேளை தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற்ற அறையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளுக்கு ஏற்பட்டது. இருந்தும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பதியப்பட வேண்டும் என முணுமுணுத்த வண்ணம் அறையினை விட்டு வெளியே வந்தார்கள். எப்படியாயினும் தொடர்ந்து இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கப் போகிறது எனவே தமிழ் தேசியக் கூட்டடைமப்பு ஓர் பதியப்பட்ட பொதுவான கட்சியாக உருவாகாமல் போகும் ஆயின் கட்சிக்குள் பாரிய பின்னடைவை எதிர் நோக்க வேண்டி ஏற்படும்.