10/23/2012

| |

நடு வீதியில் சிகிச்சை

அரசாங்க வைத்தியசாலை கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் நடு வீதியில் வைத்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்த சம்பவமொன்று அட்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சொந்த பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையில்  ஹட்டன் பிரதான வீதிஇ வட்டவளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கே அவர் இவ்வாறு சிகிச்சையளித்துள்ளார்.

வட்டவளையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

அச்சந்தர்ப்பத்தில் அவ்வழியே தனிப்பட்ட தேவையின் நிமிர்த்தம் பயணித்த அந்த வைத்தியர் காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அட்டன் கிளங்கன் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரே இவ்வாறு மனிதாபிமான பணியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பஸ்ஸில் பயணித்தவர்களில் சுமார் 18பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வைத்திய சாலையின் வைத்தியர்களுடன் இணைந்தே இந்த பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ஹட்டன் பஸ் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றே இந்த விபத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.