10/16/2012

| |

உ/த விடைத்தாள்களை மதிப்பிடும் முதலாம்கட்ட பணி புதனுடன் நிறைவு

"க.பொ.த உ/த விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளில் முதலாம்கட்ட பணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் நிறைவடையும். இந்த மதிப்பீட்டு பணிகளில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 6,800 பேர் ஈடுபட்டுள்ளனர்" என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஏ புஷ்பகுமார தெரிவித்தார்.
இதேவேளை, இரண்டாம் கட்ட பணிகள் 18 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதிவரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மதிப்பீட்டு பணிகளுக்காக 8785 விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பர். மூன்றாம் கட்ட பணிகள் 24 ஆம் திகதியிலிருந்து நவம்பர் 6 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பாடசாலைகள் மூடப்படும். அத்துடன் விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகளுக்காக மேலும் 17 பாடசாலைகள் தற்காலிகமாக மூடபட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
இதேவேளை, இறுதிக்கட்ட மதிப்பீட்டு பணிகளில் 800 பேர் ஈடபடவுள்ளதுடன் சகல பணிகளும் நவம்பர் 21 ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.