10/19/2012

| |

திவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

1) திவிநெகும சட்டமூலத்தை கொண்டுவருவதற்கான காரணம் யாது?
இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபி க்கப்பட்டது. ஊழியர்களின் தொழில் பாதுகாப்புத் தன்மை அப்போது காணப்படாமையினால் ஊழியர்கள் தமது தொழிலின் பாதுகாப்புத் தன் மையினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், சமுர்த்தி உதவி பெறுவோரும் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
எனவே மேற்படி வேண்டுகோள்கள் பக்கம் கவனம் செலுத்திய ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ஆம் ஆண்டிலே முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது வெளியிட்ட 'மஹிந்த சிந்தனை' கொள்கை பிரகடனத்தின் மூலம் சமுர்த்தி நன்மை பெறுவோருக்கு வழங்கும் நன்மைகளை மேலும் பலப்படுத்தி உறுதிப்படுத்துவதாகவும் நன்மைத் தொகையினை மேலும் அதிகரிப்பதாகவும் இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றினை தயாரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது சமுர்த்தி ஊழியர்களின் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வூதியச் சம்பளம், தொழில் பாதுகாப்பு என்பன தொடர்பாக மீண்டும் 2009 ஆம் ஆண்டிலே 'மஹிந்த சிந்தனை' தொலை நோக்கின் மூலம் மேலும் உறுதிப்படுத்தியதுடன் அதன் பிரகாரம் இந்த திவிநெகும சட்டமானது சமுர்த்தி நன்மை பெறுவோருக்கும், குறைந்த வருமானம் பெறுவோருக்கும் மற்றும் சமுர்த்தி ஊழியர்களுக்கும் ஓய்வூதியச் சம்பளம் உள்ளிட்ட ஏனைய பல்வேறு நன்மைகளை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றாக விளங்குகின்றது.
மேலும் இலங்கை சமுர்த்தி அதிகார சபை தென் மாணா அபிவி ருத்தி அதிகார சபை, சமுர்த்தி ஆணையாளர் திணைக்களம், மேல்நாட்டு கிராமிய புனரமைப்புத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரே மாதிரியான பணிகளை ஒரே நிறுவனத்தின் மூலம் மேற்கொள்வதன் மூலம் வளங்களின் வீண்விரையத்தை தடுப்பதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
2) திவிநெகும சட்டத்தின் கீழ் ஊழியர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவை?
இலங்கை சமுர்த்தி அதிகார சபை, தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை, மேல் நாட்டு அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றின் ஊழி யர்களுக்கு பின்வரும் சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக தமது விருப்பத்தை பயன்படுத்த முடியும்.
1. ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் திவிநெகும அபிவிருத்தித் திணைக் கள சேவையில் ஊழியர்களுக்கு இணைந்து கொள்ள முடியும். அவ் வாறு அவர்கள் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் அவர்களும் அரச ஊழி யர்களாகக் கருதப்படுவர்.
2. திவிநெகும அபிவிருத்தி நிறுவ னத்தில் இணைந்துகொள்ள விரும்பாத ஊழியர்கள் நட்டஈட்டினைப் பெற்றுக் கொண்டு இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சேவை யிலிருந்து விலக முடியும்.
அவ்வாறு விலகும் ஊழிய ர்கள் ஊழியர் சேமலாப நிதியினை அச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக மீளப் பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி ஊழி யர்களின் பங்களிப்பான 8% மற்றும் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பங்களிப்பான 12% உட்பட 20% வீதத் தொகையினையும் மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
இவற்றிற்கு மேலதிகமாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் ஊழியர் களுக்காக செலுத்திய ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்குச் செலுத்திய சம்பளத்தில் 3% சதவீத தொகையினையும் முழு மையாக மீளப்பெற முடியும்.
ஐந்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு பணிக்கொடை சட்டத்தின் கீழ் அவர்களுக்குரிய மொத்த பணிக்கொடை தொகையினையும் மேற்படி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.
3. திணைக்களத்தில் இணைவதற்கு தமது விருப்பத்தைத் தெரிவிக்கும் ஊழியர்களுக்கு பின்வரும் இரண்டு மாற்று வழிகளில் ஒன்றினை தேர்ந் தெடுக்க முடியும்.
(அ) திவிநெகும அபிவிருத்தி நிறுவனத்தில் இணைந்துகொள்ள விரும்பாத ஊழியர்கள் நட்டஈட்டினைப் பெற்றுக்கொண்டு இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சேவையிலிருந்து விலக முடியும். அவ்வாறு விலகும் ஊழியர்கள் ஊழியர் சேமலாப நிதியினை அச்சட்டத்தின் ஏற்பாடுக ளுக்கு அமைவாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும். இதன்படி ஊழி யர்களின் பங்களிப்பான 8% மற்றும் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பங்களிப்பான 12% உட்பட 20% வீதத் தொகையினையும் மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
இவற்றிற்கு மேலதிகமாக இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் ஊழி யர்களுக்காக செலுத்திய ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்குச் செலுத்திய சம்பளத்தில் 3% சதவீத தொகையினையும் முழுமையாக மீளப்பெற முடியும்.
ஐந்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு பணிக்கொடை சட்டத்தின் கீழ் அவ ர்களுக்குரிய மொத்த பணிக்கொடை தொகையினையும் மேற்படி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.
(ஆ) தாம் குறித்த அதிகார சபையில் சேர்ந்த தினத்திலிருந்து அரசாங்க சேவையில் இணைந்துகொள்ளும் பட்சத்தில் அரசாங்க ஓய்வூதியம் வழங்கப்படுவதனால் மேற்படி அதி கார சபையினால் ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் செலுத்திய 12% தொகை மற்றும் குறித்த வட்டி என்பவற்றினை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.
எனினும் ஊழியர்களின் சார்பாக குறித்த அதிகார சபையினால் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு செலுத்திய 3% தொகை மற்றும் அதற்குரிய வட்டி என்பவற்றினை முழு மையாக ஊழியருக்கு பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஊழியர்களினால் ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் செலுத்திய 8% தொகை மற்றும் அதற் குரிய வட்டி என்பவற்றினை அவர் களால் பெற்றுக்கொள்ள முடியும். விதவைகள் அநாதைகள் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான தொகை யினை தாம் செலுத்தல் வேண்டும்.
இம்முறையின் கீழ் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தில் சேவையில் இணைந்துகொள்ளும் ஊழியர்களுக்கு ஓய்வூதியச் சம்பளம் கணிப்பிடுவதற்கான காலத்தை கவனத்திற் கொள்ளும் போது ஊழியர் ஒருவர் குறித்த அதிகார சபையில் முதல் முதலில் இணைந்துகொண்ட திகதி அவர் அரசாங்க சேவையில் இணைந்துகொண்ட தினமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.
3. திவிநெகும அபிவிருத்தி திணைக்களச் சேவையில் இணைந்துகொள்ளும் ஊழியர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் நன்மைகள் எவை?
i . திணைக்களத்தில் இணையும் தினத்திலிருந்து அரசாங்க ஊழியராக கருதப்படல்.
ii. அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமை கிடைக்கப்பெறல்.
iii. விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியச் சம்பளம் பெறுவதற்கான உரித்து கிடைக்கப் பெறல்.
iv. வலது குறைந்த அநாதைகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளமை.
v. பணியாற்றும்போது ஏற்படுகின்ற திடீர் விபத்துக்களுக்காக நட்டஈடு பெற்றுக்கொள்ள முடிகின்றமை.
vi. புகையிரத விடுமுறை ஆணைச்சீட்டுக்கள் இலவசமாக வருடாந்தம் கிடைக்கின்றமை.
vii. அரச ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விடுமுறை இல்லங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு.
viii. ஓய்வுபெற்றதன் பின்னர் ஓய்வூதிய இல்லங்களை பயன்படுத் துவதற்கான வாய்ப்பு.
ix. 4% வட்டியில் கடன் பெற் றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றமை.
x. பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் தீர்வை சலுகை அடிப்படையிலான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு உரிமை பெறல்.
xi. பதவி உயர்வுகள், இடமாற் றங்கள் என்பவற்றிற்கு உட்படல்
xii. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை.
4) சமுர்த்தி நன்மை பெறுவோருக்கு கிடைக்கும் நன்மைகள் எவை?
i. தொடர்ச்சியாக நன்மை பெறுவதற்கு சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படல்.
ii. நலன்புரி வசதிகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடிகின்றமை.
iii. நிதியம் மற்றும் பொறுப்பு நிதி யம் என்பவற்றின் மூலம் நன்மை பெறுவோர் தொடர்ந்தும் அவற்றின் மூலம் நன்மை பெறுவதற்கான வசதிகள்.
iv. சமுர்த்தி வங்கியின் பங்குதாரர்கள் புதிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சமூக வங்கியில் பங்குதாரர்களாக மாறுதல்.
v. திவிநெகும வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற வாய்ப்புக் கிட்டுகின்றமை.
vi. ஏனைய வங்கிகளைப் போன்று சட்ட திட்டங்களை கடினமாக கடைபிடிக்காது நெகிழ்வுத் தன்மைமிக்க வகையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளமை.
vii. தமது பொருட்களை விற்பனை செய்வதற்கும் கொள்வனவு செய்வத ற்கு பேரம் பேசும் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றமை.
5) திவிநெகும சமூக வங்கியின் நிருவாகம் அமைச்சரிடம் காணப்படுமா?
இல்லை. இது 33 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்படும் முகாமைத்துவ சபையொன்றிடம் கையளிக்கப்படும். அதில் பின்வருவோர் உள்ளடக் கப்படுவர்.
1. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தலைவராவார்.
2. நிதியமைச்சின் செயலாளரின் பிரதிநிதி ஒருவர்
3. திணைக்களத்தின் கடமைக்குப் பொறுப்பான பணிப்பாளர்
4. மத்திய வங்கியின் ஆளுநரின் பிரதிநிதி ஒருவர்.
5. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதி ஒருவர்.
6) திவிநெகும வங்கி 1988 ஆம் ஆண்டின் வங்கிச் சட்டத்திலிருந்து ஏன் விடுவிக்கப்பட்டுள்ளது?
அதற்கான காரணம் இவ்வங்கி சங்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் சமுர்த்தி வங்கிகளின் நுண்நிதி செயற் பாடுகளாகும்.
7) திணைக்கள நிதியம் அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமா?
இச்சட்டத்தின் 5(2) பிரிவின் பிரகாரம் அதுபற்றிய ஆலோசனைகளை பொறுப்பான அமைச்சரினால் வழங்க முடியும். மேலும் இதன் கீழ் அமை க்கப்படும் தேசிய சபையொன்றும் காணப்படும்.
8) தொழிற்பாட்டு நிதியம் என்றால் என்ன?
சமுர்த்தி அதிகார சபையினால் அமுல்படுத்தப்படுகின்ற சமுர்த்தி மற்றும் திவிநெகும வாழ்வாதார அபிவிருத்தி, விவசாயம், விலங்கு வேளான்மை, கைத்தொழில், சந் தைப்படுத்தல் போன்ற கருத்திட் டங்களுக்கு வழங்கப்படும் நிதியிலிருந்து மீள பெற்றுக்கொள்ளும் நிதியினை சேகரித்து ஏற்படுத்தியுள்ள நிதியாகும்.
9) இச்சட்டத்தின் முலம் திவிநெகும வங்கிகளை நடாத்திச் செல் வதற்கும் வாய்ப்புக் கிட்டுகிறது.
10) முன்னர் காணப்பட்ட சமுர்த்தி வங்கிகளைப் போன்றே இதன் மூலமும் நன்மை பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் இரகசியத் தன்மைகள் பேணப்படும்.
11) இதுவரை வழங்கப்பட்ட சமுர்த்தி உதவி தொகை அவ்வாறே வழங்கப்படும். அதன்படி 2011 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரித்த ஆகக் குறைந்த உதவு தொகை யான 750/= முதல் 1500/= வரையான கொடுப்பனவுகள் சமுர்த்தி வங்கிகளினூடாகவே தற்போது வழங்கப்படுகின்றது. அதுபற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.
12) இதன் நிதி செயற்பாடுகள் மத்திய வங்கியின் கட்டுப் பாட்டின் கீழ் காணப்படு வதோடு கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வுக்கும் உட்படுத்தப்படும்.