மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் பட்டதாரி பயிலுனர்களாக பயிற்சி பெற்று வந்த பட்டதாரிகளின் ஒரு தொகுதியினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்pற்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள். விசேடமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும நிகழ்ச்சித்திட்டத்தில் குறித்த பட்டதாரி பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பிலான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று கோறளைப்பற்று தெற்கு – கிரான் , ஏறாவூர் பற்று – செங்கலடி மற்றும் மண்முனை வடக்கு – மட்டக்களப்பு ஆகிய பிரதேச செயலகங்களிலுள்ள பட்டாதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்களை முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிpயாகக் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணப்பாளர் இரா நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்களான எஸ்.கிரிதரன் மற்றும் உதயசிறிதர் உட்பட நியமனம் பெற்றுக் கொண்ட பட்டதாரி பயிலுனர்களும் கலந்து கொண்டார்கள். கிரான் பிரதேச செயலகப்பரிவில் 26 பயிலுனர்களுக்கும் செங்கலடி பிரதேச செயலாளர் பரிவில் 46 பட்டதாரி பயிலுனர்களுக்கும் மட்டக்களப்பு பிரதேச செயலகப் பரிவில் 51 பட்டதாரி பயிலுனர்கக்குமாக மொத்தமாக 123 பேருக்கு இன்று(23.10.2012) முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.