10/16/2012

| |

அப்புறுவர் ஆகிறார் அரியநேத்திரன்

1978ம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த இராசதுரை அவர்களினால் மண்முனைத் துறைப் பாலத்திற்கான முதலாவது அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. பின்னர் தமிழர்களின் போராட்டம் காரணமாக அது கைவிடப்பட்டிருந்தது-. அரியநேத்திரன்


நாளைய தினம் மட்டக்களப்பு மண்முனை துறை போக்குவரத்திற்கு பாலம் கட்டுவதற்கான ஆரம்பப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஸ வருகை தரவுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
மட்டக்களப்பு மண்முனை போக்குவரத்திற்கு பாலம் கட்டுவதாக கூறி நாளைய தினம் இரண்டாவது தடவையாக அரசாங்கம் அடிக்கல் நாட்டுவிழா நடாத்துவது வேடிக்கையாகவுள்ளது. அரசாங்கமும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் மண்முனை பாலத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள்.
கடந்த 1978ம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த இராசதுரை அவர்களினால் மண்முனைத் துறைப் பாலத்திற்கான முதலாவது அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. பின்னர் தமிழர்களின் போராட்டம் காரணமாக அது கைவிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக உருவான பாதிப்புக்களை கருத்தில்கொண்டு ஜப்பான் அரசாங்கத்தினால் மண்முனைத் துறைப்பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்றார்