10/03/2012

| |

தண்டாயுதபாணியை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தமையானது மட்டக்களப்பு மக்களை புறக்கணித்மைக்கு தக்க ஆதாரம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒழுங்குபடுதலினாலும், ஊடகவியலாளர் த.சிவராம் போன்றவர்களினது முயற்சியினாலும் தமிழர் நலன்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, தற்போது பலராலும் விமர்சிக்கப்படுகின்ற ஒரு கட்சியாக மாற்றம் பெற்றிருக்கின்றது.
தமிழர் நலன் சாராது கட்சியிலுள்ள சிலர் தமது சுயநலங்களுக்காக கட்சியின் நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றமையே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. அந்தவகையில்  இவ்வருடம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் முதல் தற்போது இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்;சி தலைவர் தேர்வு வரையிலான விடயங்களில் மட்டக்களப்பு மக்களின் நலனில் எந்தவித அக்கறையும் அற்ற ஒரு நிலையினை வெளிப்படுத்துகின்ற தன்மைகள் தெளிவாக தெரிகின்றன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது எதுவித தேர்தல் விஞ்ஞாபனமுமின்றி போட்டியிட்டிருநத்து. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கே முக்கிய காரணம் ஒரு தமிழ் முதலமைச்சரை அதுவும் கிழக்கு மாகாணத்தில் ஒருதலைமை இல்லாதொழிக்கப்படவேண்டும் என்ற வெறும் கபடத்தனத்திலேயாகும் என்பதை நான் ஏற்கனவே எனது கட்டுரைகளில் தெளிவாக கூறியிருந்தேன்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதை எதிர்பாத்ததோ அதில் பிள்ளையானை தோற்கடிக்க முடியாமல் போனதே தவிர, மற்றப்படி ஏனைய அனைத்தையும் சாதித்துள்ளது. குறிப்பாக இன்றைய கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் மற்றும் எதுவித அமைச்சு பதவிகளும் தமிழர் ஒருவருக்கு கிடைக்காமல் முஸ்லிம் தலைமைத்துவத்திடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்த பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினையே சாரும். இதனை அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபக்ச கூட தனது உரையொன்றிலே சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பக்கச்சார்பானதும் மற்றும் ஜனநாயகமற்றதுமான பல செயற்பாடுகளை கண்மூடித்தனமாக அரங்கேற்றி வருகின்றது. அந்தவகையில் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக திருகோணமலையைச் சேர்ந்த தண்டாயுதபாணி என்பவரை தலைவராக்கியிருப்பதன் ஊடாக மட்டக்களப்பு மக்களை புறக்கணித்து வருகின்ற விடயம் வெட்டவெளிச்சமாகியுள்ளதுடன், அதனுடன் சேர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏiனைய கட்சிகளையும் ஓரங்கட்டும் செயற்பாடுகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் மேற்கொள்கின்றார் என்பதை தெரியப்படுத்துகின்றது.
கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக அண்மையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்ட தண்டாயுதபாணி என்பவரை சம்பந்தன் குழுவினர் நியமித்தார்கள். இது உண்மையில் ஜனநாயகம் வேண்டு;ம் என்று வாதிட்டு திரியும் தமிழரசுக் கட்சியினரின் அநியாயத்தன்மையை சுட்டிpநிற்கின்றது. கிழக்கு மாகாண சபையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைப் பெற்றிருந்தது . அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 ஆசனங்கள், திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆசனங்கள், அம்பாறையில் இரண்டு ஆசனங்களும் கிடைத்திருந்தது.
இது தவிர, அதிகூடிய விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் மட்டக்களப்பில் போட்டியிட்ட ஈபி.ஆர்.எல்.எப் ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் இரா.துரைரெத்னம் அவர்களே சுமார் 29000 வாக்குகளை பெற்றிருந்தார். அதற்கு அடுத்த பட்சமாக மட்டக்களப்பைச் சேர்;ந்த துரைராசிங்கம் பெற்றிருந்தார். இவர் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆனால் இவர்களை விட குறைந்த வாக்குகளைப் பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த தண்டாயுதபாணி (இவரது பரம்பரை யாழ்மேட்டுக்குடி வர்க்கத்தினைச் சார்ந்தது)என்பவரை தமிழ்தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைவராக நியமித்தமையானது மட்டக்களப்பு வாழ் தமிழர்களை புறக்கணிக்கும் அவர்களது சுயநல கபடத்தனம் நிறைந்த எண்ணத்தினை தௌ;ளத்தெளிவாகப் புலப்படுத்தி நிற்கின்றது.
அதிக வாக்குகளை பெற்ற துரைரெத்தினமே உண்மையில் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கவேண்டும். இதைவிட மட்டக்களப்பு மாவட்டம்தான் அதிகளவில் 75 சதவீதமான தமிழர்களை கொண்டது மட்டுமன்றி தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகூடிய ஆசனங்களை குறிப்பாக 6 ஆசனங்களை பெற்றுக்கொடுத்தும் ஒரு இலட்சத்திற்கும் மேலான வாக்குகளை அளித்தும் கட்சியை இரண்டாவது இடத்திற்கு கொண்டு சென்றது .
இந்த வகையிலும் மட்டக்களப்பில் இருந்து ஒருவரே எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கவேண்டும். சரி துரைரெத்தினம் மட்டக்களப்பின் தலைமை வேட்பாளர் இல்லை என்றாலும் மட்டக்களப்பில் தலைமைவேட்பாளராக போட்டியிட்ட துரைராஜசிங்கத்திற்காவது கொடுத்திருக்கலாம்தானே? என்ற கேள்விகள் தற்போது மட்டக்களப்பு வாழ் தமிழர்களிடைய ஒரு சந்தேகத்தை த.தே.கூ. மீது ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள ஏனைய கட்சிகளை மட்டந்தட்ட நினைக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சுயநலப்போக்கும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் தேர்வில் இடம்பெற்றுள்ளதாக சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சியினர் கூறிவருகின்றனர்.  உண்மையில் கிழக்கு மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற துரைரெட்ணம் தமிழரசுக்ட்சியினைச் சேர்ந்தவரல்ல. இவர் ஈபி.ஆர்.எல்.எப் கட்டசியைச் சேர்ந்தவர். இத்தகையவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கூடாது என்ற கபட நோக்கமும், இங்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய தமிழரசுக்கட்சியின் சுயநலப்போக்குகள் காரணமாக கட்சிக்குள் உள்மோதல் நிலைமைகள் வலுவடைந்துள்ளதுடன், சுரேஸ்பிரமச்சந்திரன் போன்றவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் விடுத்துவருகின்றார்கள்.
கடந்த 01.10.2012 அன்று கிழக்கு மாகாண சபையில் கட்சி தலைவர்களுக்கு இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளின் தலைவர்களான துரைரெட்ணம், வெள்ளிமலை . ஜனா முதலியோரும் தமிழரசுக்கட்;சியின் தலைவராக தண்டாயுதபாணியும் சென்றிருந்தனர் . ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமையினாலும், இலங்கை தமிழரசுக்ட்சியே பதிவுசெய்யப்பட்டிருப்பதனாலும் தண்hடாயுதபாணி மாத்திரம் பங்கெடுத்தார்.
ஏனையவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இவையும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது சுயநலங்களுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யாமல் இருப்;பதனை வெளிப்படுத்தியுள்ளது. தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாது காலத்தை நீடிக்குமானால் தனது கட்சி வலுவிழக்கும் நிலை ஏற்படலாம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு சார்பாக அரசியல் கட்டுரைகளை எழுதிவரும் இரா.துரைரெட்ணம் (தினக்கதிர்) என்பரே குறிப்பிட்டிருந்தமையானது எந்தளவிற்கு கட்சிக்குள் முரண்பாடு முற்றியுள்ளது என்பதைன வெளிப்படுத்தி நிற்பதற்கு சிறந்த சான்றாகும்.
கிழக்கு மாகாண சபையில் தற்போது மூன்று முஸ்லிம்களும்,ஒரு சிங்களவரும் முதலமைச்சர் மற்றும் அமைச்சு பதவிகளை வகிக்கின்ற இதேவேளை தமிழர் தரப்பு வீணே எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்துகொண்டு காலத்தை கடத்தவிருக்கின்றது. கடந்த மாகாண சபை தேர்தல் காலங்களில் வடக்கிலிருந்து அனைத்து தமிழ்தேசியக் கூட்டமைப்பை; சேர்ந்த தலைவர்களும் படையெடுத்து வந்து, நயவஞ்சகமாக மக்களை ஏமாற்றி வாக்குகளை திருடிவிட்டனர். ஆனால் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அப்போது தேர்தல் காலங்களில் வந்தது போன்று படையெடுத்து வந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்களா?....
-     ஆராவாணன் -