10/16/2012

| |

ஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி குவைத் பயணம்

ஆசிய ஒத்துழைப்புப் பேரவை யின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பிற்பகல் குவைத் நாட்டிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
ஆசிய ஒத்துழைப்புப் பேரவையின் மாநாடு நேற்றைய தினம் ஆரம்பமானதுடன் தொடர்ந்து 17 ஆம் திகதி வரை மாநாட்டு அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இம் மாநாட்டில் ஆசிய பிராந்தியத்தின் 31 நாடுகளின் தலைவர்களும் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம் மாநாடு குவைத் நாட்டுத் தலை வரின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் ஆசியாவின் பொருளாதார சவால்கள், அதற்கான தீர்வுகள் தொடர்பில் இம் மாநாட்டில் அரச தலைவர்களால் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளன.
மேற்படி மாநாட்டில் கலந்து கொள்வதற் காக நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குவைத்துக்குப் பயணமானார். ஜனாதிபதி மேற்படி மாநாட்டில் கலந்துகொள்ளும் அதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வுள்ளார்.
அத்துடன், கவூதி அரேபிய மன்னர் மற்றும் குவைத் நாட்டின் தலைவருடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
குவைத்துக்கான இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்களுடன் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்தன, ஏ.எச்.எம். அஸ்வர் ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்களடங்கிய தூதுக் குழுவினரும் உடன் சென்றனர்.
ஆசிய நாடுகளுக்கிடையிலான ஒத்து ழைப்பு உறவுகளை மென்மேலும் பலப் படுத்துவது பேட்டித் தன்மைகளை பெற் றுக்கொள்தல் ஆகிய நோக்கங்களுக்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது. அத்துடன் பிரார்த்தியத்துக்கான பொதுவான பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.