10/28/2012

| |

நைஜீரிய தேவாலயம் மீது தற்கொலை தாக்குதல்

தாக்குதலுக்கு உள்ளான தேவாலயம்
நைஜீரியாவின் வடபகுதியில் கடுனா நகரில் றோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் சக்தி மிக்க வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.
தேவாலய சுவரில் ஒரு தற்கொலையாளி குண்டு நிரப்பிய ஜீப்பை மோதியதாக ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
தேவாலயத்தின் உட்புறம் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளின் கூரைகளும் வெடித்துச் சிதறியதாகவும் அவர் கூறினார்.
குறைந்தபட்சம் 4 பேர் இறந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் தேவாலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த கிறிஸ்தவ இளைஞர்கள், அங்கு தாக்குதலில் அகப்பட்டவர்களை மீட்கச் சென்ற அரசாங்க வாகனம் ஒன்றை தாக்கியதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அங்கு அமைதி காக்குமாறு நிர்வாகம் கோரியுள்ளது.