10/26/2012

| |

பாசிக்குடா கடற்கரையின் முகாமை தொடர்பில் முன்னாள் முதல்வர் அவதானம்.

கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே உல்லாசத்;துறையின் உல்லாச புரியாக விளங்குகின்ற பாசிக்குடா எழில் மிகு கடற்கரையின் நிலைமைகள் தொடர்பில் முன்னாள் முதல்வரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று நேரில் சென்று அவதானித்தார். கடற்கரையின் முகாமை மற்றும் சுகாதாரம்,பாதுகாப்பு உள்ளிட்ட பிற வசதிகள் குறித்தும் அவதானம் செலுத்தினார்.
எமது நாட்டிற்கு அதிக வருமான் ஈட்டித் தருகின்ற ஓர் துறையாக உல்லாசத்துறை விளங்குகின்றது. மேற்குறித்த பாசிக்குடா கடற்கரையானது கடந்த 30 வருடங்களாக மனிதர்கள் பயன்படுத்தா வண்ணம் காடுமண்டிக் காணப்பட்து. இவ்வாறான கடற்கரை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்  சந்திரகாந்தன் ஆட்சிக்காலத்திலே பல்வேறு வகையிலான பாரிய அபிவிருத்தியைக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது அது சார்நத பிற அபிவிருத்pப் பணிகளும் தொடரப்பட்டுக் கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.