சீரற்ற காலநிலை இன்று நாடெங்கிலும் வியாபித்திருக்கிறது. பெரு வெள்ளம், மண்சரிவுகள், மேக மூட்டத்தினால் மலையக வீதிகளில் அதிகரித்து வரும் வாகன விபத்துகள் ஆகியவற்றினால் இன்றைய சூழ்நிலையில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கி றார்கள்.
மண்சரிவு ஏற்படும் அபாயம் இருக்குமென்று எச்சரிக்கப்பட்ட பிரதேசங்க ளில் இருந்து மக்கள் இப்போது இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங் களில் குடியேறி இருக்கிறார்கள். பொதுவாக ஒப்டோபர், நவம்பர் மாத ங்களில் இலங்கையின் சகல பிரதேசங்களும் பருவப்பெயர்ச்சி மழை காலத்தை எதிர்நோக்குவதுண்டு.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எங்கள் நாடு பெரும் வரட்சியி னால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், விவசாயிகள் நெற்சாகுபடி செய்ய முடியாத கஷ்ட நிலையில் இருந்தார்கள். இன்று அடை மழை பெய்ய ஆரம்பித்திருக்கின்ற போதிலும் அது ஓரிரு வாரங்களில் ஓய்ந்துவிட வேண்டும். இல்லையானால் வெள்ளக்காடாகி இருக்கும் வயல் நிலங்க ளில் பெரும்போக செய்கையை ஆரம்பிப்பது கஷ்டமாக இருக்கும்.
மழை காலம் ஆரம்பித்துவிட்டால் அதனுடன் மரணங்களும் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். அதற்கமைய கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழையினால் சிலர் மண்சரிவுகளினாலும் வேறு சிலர் வீதி விபத்துகளாலும் இறந்துள்ளார்கள். (மழை காலத்தில் மின்னல் தாக்கி மரணிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கின்றது.)
(குறிப்பாக மழை காலத்தில் மின்னல் தாக்கி மரணிப்பவர்களின் எண்ணி க்கை அதிகமாக உள்ளது.) மழை பெய்யும் போது மக்கள் தங்கள் வீடு களுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டுமென்று காலநிலை அவதானிகள் யோசனை தெரிவிக்கிறார்கள். மழை பெய்யும் போது வெளியில் செல் லலாகாது என்றும் துவிச்சக்கர வண்டி, உழவு இயந்திரங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற திறந்த வாகனங்களில் பயணித்தால் நிச்சயம் மின்னல் தாக்குமென்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
அடர்ந்து வளர்ந்த பாரிய மரங்களுக்கு கீழ் மழை பெய்யும் போது பாது காப்பாக இருக்கிறோம் என்ற நினைப்பில் நிற்பவர்களையும் மின்னல் தாக்கி மரணிக்கும் அச்சுறுத்தலும் இருக்கின்றது. மழை பெய்யும் போது ஒரு பக்கத்தில் நன்மையும் இன்னொரு பக்கத்தில் தீமையும் ஏற் படுவதுண்டு. ஜல மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாட்டின் பல நீர்த் தேக்கங்கள் மழை பெய்வதனால் இன்று நிரம்பி வழிகின்றன.
து போன்று, பல மாதங்களாக தாகத்திற்கு நீரின்றி தவித்துக் கொண்டிரு ந்த வன விலங்குகளின் தாகத்தை தீர்க்கும் அளவுக்கு இன்று வனப் பிரதேசங்களில் நீர் வழிந்தோடுகின்றது. பொதுமக்கள் சாதாரணமாக மழை பெய்வதை பெரிதும் விரும்புவார்கள். ஓகஸ்ட் மாத மழை காலம் வந்தவுடன் பல மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் நிலவி வந்த கோடை உஷ்ணம் நீங்கிவிடும். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட சரும ரோகங்களும் தணிந்துவிடுவதுண்டு.
மழை காலம் ஏற்பட்டால் இன்னுமொரு தீமையும் ஏற்படும். மழை பெய்து ஓய்ந்தவுடன் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளின் இனவிருத்தி பல மடங்கு அதிகரிக்குமென்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். எனவே, மழை காலத்தில் பொதுமக்கள் பொது இடங்களில் அநாவசியமாக நீர் தேங்கியிருப்பதை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லாவிட்டால் மழை ஓய்ந்த பின்னர் சூரிய ஒளியில் இவ்விதம் தேங்கியிருக்கும் தண்ணீரில் டெங்கு நுளம்புகள் வெகு வேகமாக இன விருத்தி செய்கின்றன என்று அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள் ளது.
இலங்கை மீது இயற்கை அன்னை தனது கருணைக் கண்ணை திருப்பியி ருப்பதனால் பாரதூரமான இயற்கை அனர்த்தங்கள் எங்கள் நாட்டுக்கு ஏற்பட இருந்த பெரும் பாதிப்பு ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தியா போன்ற அயல் நாடுகளுக்கு சுனாமி யினால் ஏற்பட்ட பாதிப்பை விட இலங்கைக்கு ஏற்பட்ட சுனாமியின் பாதிப்பு குறைவாகவே இருந்தது.
இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் இந் திய, அவுஸ்திரேலிய புவித்தட்டில் தற்போது சில அசைவுகள் காணப் படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இலங்கையின் தென் மேற்கு கரையோரப் பகுதி ஒரு புதிய தகடு உருவாகிக் கொண்டி ருப்பதனால் எதிர்காலத்தில் இலங்கையிலும் பூமியதிர்ச்சிகள் ஏற்பட லாம் என்று எச்சரிக்கை செய்யப்படுகின்றது.
தற்போது இருக்கும் தகவல்களின் படி 1615ம் ஆண்டில் இலங்கையில் ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி ஏற்பட்டதென்றும் இதில் ஆயிரக்கணக்கா னோர் கொல்லப்பட்டார்கள் என்றும் வரலாற்றில் இருந்து தேடி எடுக் கப்பட்ட ஆவணங்கள் சான்று பகர்கின்றன. சமீப காலமாக இலங்கை யில் சிறிய பூமியதிர்வுகள் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருக்கின் றன.
கொழும்பு மாநகரை அடுத்துள்ள பிரதேசத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டால் அதனால் பாரிய பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படும் என்று ஆய் வாளர்கள் கூறுகிறார்கள். 20ம் நூற்றாண்டில் பூமியதிர்ச்சி பெருமளவில் ஏற்படாத காரணத்தினால் இலங்கையில் என்றுமே பூமியதிர்ச்சி ஏற் படாதென்று நாம் கூற முடியாதென்றும் 1932ம் ஆண்டில் இலங்கை யில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதென்றும் அப்போது கட்டிடங்கள் குறை வாக இருந்ததனால் அந்தவுளக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
1802ம் ஆண்டில் காலியில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலினால் ஆயிரக் கணக்கானோர் அங்கு மரணித்தார்கள். எனவே, பூமியதிர்ச்சி ஏற்படாது என்ற நம்பிக்கையில் இருப்பதை விட பூமியதிர்ச்சி ஏற்பட்டால் எவ் விதம் எங்களை காத்துக் கொள்வது என்பது பற்றி நாம் அவதான த்தை செலுத்துவது அவசியம்.