மட்டக்களப்பு,பெரியகல்லாறு,
உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்திவிழாவின்
வாழைக்காய் எழுந்தருளும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
காலை வீரகம்பம் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றதுடன் பிற்பகல்
4.00மணியளவில் பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து
வாழைக்காய் எழுந்தருளள் செய்யப்பட்டு ஆலயத்துக்கு ஊர்வலமாக
கொண்டுசெல்லப்பட்டது.இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கற்பூரச்சட்டி ஏந்தி தமது நேர்கடன்களை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன